விரைவில் கைக்கு எட்டப்போகும் இந்தியாவின் முதல் சூப்பர் கார்!

இந்தியாவின் பிரபல கார் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனமான டிசி டிசைன்ஸ் கடந்த ஆண்டு புதிய சூப்பர் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் சூப்பர் காரான இதற்கு டிசி அவந்தி என பெயரிடப்பட்டது. கடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த காரை பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளிலும் டிசி டிசைன்ஸ் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக, குஜராத்தில் புதிய ஆலையையும் அமைக்கிறது. ரூ.60 கோடியில் அமைக்கப்படும் இந்த புதிய ஆலையில் இந்த ஆண்டு இறுதி முதல் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சூப்பர் காரான டிசி அவந்தி பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. மேலும், ஹோண்டாவின் வி6 எஞ்சினையும் பொருத்தவும் திட்டம் இருப்பதாக டிசி தெரிவித்துள்ளது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் மணிக்கு 250கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

குறைந்த விலை

குறைந்த விலை

சூப்பர் கார்கள் என்றாலே விலை பல கோடிகளை தாண்டும். ஆனால், டிசி உருவாக்கியிருக்கும் இந்த கார் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் விலையில் விற்பனைப்பட உள்ளது.

 டீலர்கள்

டீலர்கள்

நாடு முழுவதும் உள்ள டிசியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வழியாக இந்த சூப்பர் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

அடுத்து புதிய எஸ்யூவி

அடுத்து புதிய எஸ்யூவி

இந்த சூப்பர் கார் தவிர புதிய சூப்பர் எஸ்யூவி ஒன்றையும் டிசி அறிமுகம் செய்ய உள்ளது.

லிமிடேட் எடிசன் மட்டும்

லிமிடேட் எடிசன் மட்டும்

டிசி தயாரிக்கும் அனைத்து கார்களுமே லிமிடேட் எடிசனாக வர இருக்கிறது. ஒவ்வொரு மாடலிலும் 4,000 கார்களை மட்டுமே விற்பனை செய்ய டிசி திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

டிசி அமைக்க இருக்கும் ஆலையில் ஆண்டுக்கு 3,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

டிசி அவந்தி படங்கள்

டிசி அவந்தி படங்கள்

டிசி அவந்தி படங்கள்

டிசி அவந்தி படங்கள்

Most Read Articles
English summary
DC Design, India's leading and most well known car design house will begin production its first ever vehicle starting from late 2013. Towards this end, the Dilip Chhabria led design firm will set up its own manufacturing facility at Sanand in Gujarat with an investment of INR 60 crores.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X