2013ம் ஆண்டின் சக்திவாய்ந்த பிராண்டு: ஃபெராரிக்கு முதலிடம்!

இந்த ஆண்டின் சக்திவாய்ந்த பிராண்டுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஃபெராரி கார் நிறுவனத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. லண்டனிலிருந்து செயல்படும் பிராண்டு ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. அதில், உலகின் முன்னணி நிறுவனங்களை மதிப்பீடு செய்து இந்த ஆண்டுக்கான தரவரிசை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் நிதி சார்ந்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தின் நிகர வருவாய், ஒரு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வருவாய், சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரத்திற்கான செலவீனம், தயாரிப்பு தரம், பிராண்டு மீது இருக்கும் ஈர்ப்பு, நம்பிக்கை ஆகிய அனைத்து அம்சங்களையும் பார்த்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இறுதியில் இந்த ஆய்வில் ஃபெராரி முதலிடம் பெற்றிருக்கிறது. ஃபெராரிக்கு இதுபோன்ற கவுரவம் கிடைத்துள்ளதற்கு அந்த பிராண்டு மீது தொன்று தொட்டு இருந்து வரும் ஈர்ப்பு முக்கியமானது. அவ்வாறு, தனது கார்கள் மீது ஈர்ப்பு வரும் வகையில் ஃபெராரி தயாரித்த சில முக்கிய கார் மாடல்களை பற்றி பார்ப்பதற்கு முன்... ஃபெராரி தயாரித்த கார் ஒன்று அவலட்சமான கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கார் பற்றி தெரிந்துகொள்ள செய்தி வாசியுங்கள்.

ஃபெராரி 250 டிஆர்

ஃபெராரி 250 டிஆர்

250 டெஸ்டா ரோஸா கார் ஃபெராரியின் காஸ்ட்லியான கார்.1957ம் ஆண்டு தயாரிப்பான இந்த கார் 1958,1960 மற்றும் 1961ம் ஆண்டு லீ மேன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாடல். கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இந்த கார் 16.4 மில்லியன் டாலர் விலையில் ஏலம் போனது. இதுதான் ஃபெராரியின் காஸ்ட்லியான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஃபெராரி 250 ஜிடிஓ

ஃபெராரி 250 ஜிடிஓ

1960ம் ஆண்டில் ஃபெராரி தயாரித்த மாடல்தான் கிரான் டூரிஷ்மோ ஒமோலோகட்டோ. 1962,1963 மற்றும் 1964ம் ஆண்டுகளில் உலக தயாரிப்பாளர்கள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்த கார்தான் வெற்றி பெற்றது.

599 ஜிடிபி ஃபியரானோ

599 ஜிடிபி ஃபியரானோ

2006ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 6 ஆண்டுகளில் பல்வேறு மாடல்களில் விற்பனைக்கு வந்தது. இதன் டிசைன் மட்டுமல்ல இதன் ஆற்றல் வாய்ந்த வி12 எஞ்சினும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. சிறந்த சூப்பர் காருக்கான விருதை பெற்ற மாடல் இது.

ஃபெராரி 458 இட்டாலியா

ஃபெராரி 458 இட்டாலியா

ஃபெராரியின் எஃப் 430 காருக்கு மாற்றாக வந்த இந்த கார் அழகான சூப்பர் கார் என்று போற்றப்பட்டது. 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது பல விருதுகளை பெற்றது. 2011ல் கேப்ரியோ கார் அறிமுகம் செய்யப்பட்டபோதிலும் இந்த கார்தான் சிறந்த கார் என்ற விருதை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் இது. 599ஜிடிபி காருக்கு மாற்றாக வந்தது. டிசைன் மற்றும் ஆற்றல் வாய்ந்த எஞ்சின் மட்டுமல்ல, இந்த கார் சோதனையில் ஒரு கேலனுக்கு 18 மைல்கள் சென்று சிறந்த எரிபொருள் காராகவும் தன்னை நிரூபித்தது.

ஃபெராரி என்ஸோ

ஃபெராரி என்ஸோ

ஃபெராரியின் கார் பட்டியலில் என்ஸோ இல்லாமல் நிறைவடைந்தால் அது முழுமை பெறாது. அந்தளவுக்கு ஃபெராரியின் சிறந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. 2002ம் ஆண்டில் அறிமுகம் செய்ப்பட்ட இந்த கார் ஃபெராரியின் நிறுவனர் என்ஸோவின் நினைவாக தயாரிக்கப்பட்ட மாடல். இது பார்முலா-1 தொழில்நுட்பத்தின் படி தயாரிக்கப்பட்ட கார். இந்த காரும் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. ஆனால், அதில் ஒன்று வித்தியாசமான விருது. ஆம், 50 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அவலட்சணமான டாப் 50 கார்களின் பட்டியில் என்ஸோவுக்கும் இடம் கொடுத்து பட்டியலை வெளியிட்டது புளூம்பெர்க் பிசினஸ் வீக் இதழ்.

ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ்

ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ்

ரேஸ் டிராக்கில் இந்த காரை உரிமையாளர்கள் ஓட்டி பார்க்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஃபெராரி நடத்துகிறது. மேலும், இந்த காரை டாப் கியரின் ரேஸ் டிராக்கில் முன்னாள் பார்முலா-1 சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் ஒரு நிமிடம் 10 வினாடிகளில் ஒரு சுற்றை சுற்றி வந்து திகைக்க வைத்தார்.

Most Read Articles
English summary
Brand Finance, a London, U.K based brand and asset valuation company has come out with a report evaluating all the major companies of the world and has positioned Ferrari at the top, giving it the "Most powerful brand of 2013" title.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X