லீனியா டி-ஜெட் பெர்ஃபார்மென்ஸ் செடானை மீண்டும் இறக்கிய ஃபியட்

By Saravana

அதிக பெர்ஃபார்மென்ஸ் ரக செக்மென்ட்டில் லீனியா டி-ஜெட் காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஃபியட். முன்னர், டைனமிக், எமோஷன் ஆகிய இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆக்டிவ் என்ற பேஸ் வேரியண்ட்டையும் இணைத்துள்ளது ஃபியட்.

இதனால், தற்போது மிட் சைஸ் கார் செக்மென்ட்டில் மிகக் குறைந்த விலை கொண்ட பெர்ஃபார்மென்ஸ் காராக லீனியா டி-ஜெட் மாறியுள்ளது. இந்த காரில் 1368சிசி கொண்ட 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 114 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.

Fiat Linea T Jet

லெதர் இருக்கைகள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட பிரிமியம் அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், சென்ட்ரல் லாக்கிங், டூவல் ஸ்டேஜ் முன்பக்க ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தனித்து களமிறங்கியிருக்கும் ஃபியட் தனது போர்ட்போலியோவை வலுப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்ட லீனியா டி-ஜெட் காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதேவரிசையில், அடுத்து பெர்ஃபார்மென்ஸ் காராக புன்ட்டோ அபார்த்தை வரும் தீபாவளி பண்டிகையின்போது ஃபியட் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

லீனிடியா டி-ஜெட் ஆக்டிவ்: ரூ.7.60 லட்சம்

லீனிடியா டி-ஜெட் டைனமிக்: ரூ.8.40 லட்சம்

லீனிடியா டி-ஜெட் எமோஷன்: ரூ.8.80 லட்சம்

Most Read Articles
English summary
Fiat India has launches the Linea T-Jet with more features in three variants with prices ranging from Rs 7.60 lakh to Rs 8.80 (ex-showroom Delhi). Fiat Linea T-Jet is powered by 1.4 L Turbo Charged petrol engine which makes 114 PS at 5000 RPM and 207 Nm of torque at 2200 RPM. This engine is mated to 5 sped Manual Gearbox.
Story first published: Monday, June 10, 2013, 22:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X