ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடல் அறிமுகம்!

இதுவரை ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் ஒன் 4 வீல் டிரைவ் எல்எக்ஸ் என்ற வேரியண்ட்டில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் டெய்ம்லர் நிறுவனத்திடமிருந்து லைசென்ஸ் பெற்று ஃபோர்ஸ் உற்பத்தி செய்கிறது.

பவர்

பவர்

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 141 எச்பி பவரையும், 321 என்எம் டார்க்கையும் அளிக்கும் வல்லமை கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் ஷிப்ட் ஆன் தி ஃப்ளை சிஸ்டம் மூலமாக 4 சக்கரங்களுக்கும் ஆற்றல் கடத்தப்படுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த 4 வீல் டிரைவ் மாடலில் ஆல் டெர்ரெய்ன் அம்சம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 வசதிகள்

வசதிகள்

ஃபோர்ஸ் ஒன் 2 வீல் டிரைவ் மாடலின் எஸ்எக்ஸ் என்ற நடுத்தர வேரியண்ட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த 4 வீல் டிரைவ் எல்எக்ஸ் வேரியண்ட்டில் கிடைக்கும்.

அடடா...

அடடா...

இபிடி., சிஸ்டத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருக்கும். அதேவேளை, ஏர்பேக்குகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சென்ட்ரல் லாக்கிங், பிரேக் பேட் தேய்மானத்தை தெரிவிக்கும் எச்சரிக்கை வசதி, அதிவேகத்தை உணர்த்தும் எச்சரிக்கை மானி போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள், முன்புறம் மற்றும் பின்புற பனி விளக்குகள், எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள், அலாய் வீல்கள், லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்ற சிறப்பம்சங்களையும், வசதிகளையும் கொண்டுள்ளது.

விலை

விலை

ரூ.13.74 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
While Force Motors brought out the new Force One SUV in July last year, the top-of-the-line, Force One 4x4 LX variant had not been released in the market. The all-wheel drive Force One is now available for booking nearly an year later, with deliveries begins from June 2.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X