அடுத்த ஆண்டு புதிய ஃபிகோ காரை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு

By Saravana
Figo
அடுத்த ஆண்டு புத்தம் புதிய ஃபிகோ காரை அறிமுகப்படுத்த உள்ளது ஃபோர்டு.

1996ல் முதன்முறையாக ஃபிகோ காரை ஃபோர்டு அறிமுகம் செய்தது. கா காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ஃபிகோ 2010ல் இந்தியாவில் அறிமுகமானது.

அதுவரை இந்திய மார்க்கெட்டில் சரியான முகவரி இல்லாமல் தவித்து வந்த ஃபோர்டு நிறுவனத்துக்கு ஃபிகோ பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபிகோ கார்களை ஃபோர்டு இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு சின்ன சின்ன மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுத்து ஃபிகோவை ஃபோர்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், முற்றிலும் புதிய வடிவமைப்புடன் கூடிய பிராண்ட் நியூ ஃபிகோ காரை ஃபோர்டு வடிவமைத்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய ஃபிகோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. வேல்யூ- பி என்ற பெயரில் புதிய ஃபிகோ வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் அதிசக்திவாய்ந்த அதே 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சினை புதிய ஃபிகோவில் பொருத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளது. ஆனால், 69 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டிருக்கும்.

இந்த புதிய காரின் இன்டிரியரிலும் பல மாற்றங்கள் இருக்கும். மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும். மேலும், இந்த புதிய ஃபிகோவின் செடான் வெர்ஷனையும் ஃபோர்டு வடிவமைத்து வருகிறது.

இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் கிளாசிக் செடான் காருக்கு மாற்றாக வரும் என தெரிகிறது. இதனிடையே, புதிய ஃபிகோ அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட தற்போதைய ஃபிகோ மாடலை ஃபோர்டு தொடர்ந்து விற்பனை செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The Ford Figo has been the American carmaker's best selling car in India since quite some time. The Figo is based on the Ford Ka which was first launched in 1996. So the Figo can be considered as quite an old car despite recent updates. Quite naturally Ford is planning to replace the current Figo with a brand new car that is expected to be unveiled during the later half of this year.
Story first published: Friday, February 1, 2013, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X