நாளை மறுதினம் அறிமுகமாகிறது புதிய செவர்லே செடான்!

By Saravana
Sail Sedan
நாளை மறுதினம் செவர்லே பிராண்டில் புதிய செடான் காரை இந்திய மண்ணில் அறிமுகப்படுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

ஹேட்ச்பேக் கார்களுக்கான மார்க்கெட்டுக்கு அடுத்து செடான் கார்களுக்கு மவுசு அதிகம் இருக்கிறது. இதனால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் செடான் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஹோண்டா அமேஸ், மஹிந்திராவின் குட்டி வெரிட்டோ உள்ளிட்ட கார்கள் வர இருக்கும் நிலையில், தற்போது செவர்லே பிராண்டில் புதிய செடான் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்கிறது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட செயில் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷனாக இந்த கார் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாருதி டிசையர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மார்க்கெட்டில் டொயோட்டா எட்டியோஸ், மஹிந்திரா வெரிட்டோ உள்ளிட்ட கார்கள் சிறிதளவு பங்களிப்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், போட்டிகள், சவால்களை தாண்டி செவர்லே செயில் செடான் விற்பனையில் முக்கியத்துவம் பெறுமா? பார்க்கலாம்.

Most Read Articles
English summary
The company, which is the sixth largest in terms of volumes in the domestic market, will launch the Chevrolet Sail sedan this Friday. The car will compete against the Toyota Etios, Maruti Swift DZire, Hyundai Verna, Volkswagen Vento and the to-be-launched Honda Amaze.
Story first published: Wednesday, January 30, 2013, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X