லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தருமாம் அமேஸ் - பிற விபரங்கள்

அமேஸ் பற்றி வரும் தகவல்கள் டிசையர் வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி ஹோண்டா தனது முதல் டீசல் காரான அமேஸை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஹோண்டா இதுபற்றி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், அமேஸ் பற்றி வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஹோண்டா அமேஸ் எஞ்சின் காம்பெக்ட் செடான் மார்க்கெட்டிலேயே மிகவும் பவர்ஃபுல்லானது என சமீபத்தில் தகவல் கசிந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது அமேஸ் மைலேஜ் பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டா அமேஸில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது டாடா இண்டிகோ இசிஎஸ் மற்றும் செவர்லே பீட் கார்கள்தான் அதிக மைலேஜ்(லிட்டருக்கு 25.4 கிமீ) தரும் டீசல் கார்கள் என்ற பெருமையை தக்கவைத்து வருகின்றன. இதனை அமேஸ் உடைக்கும் என கூறப்படுகிறது.

பவர்

பவர்

அமேஸ் காரின் டீசல் எஞ்சின் அதிக மைலேஜ் தருவதோடு மட்டுமின்றி 100 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிசையருக்கு நெருக்கடி

டிசையருக்கு நெருக்கடி

அதிக விற்பனையாகும் காம்பெக்ட் செடான் காரான டிசையரில் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஹோண்டாவின் அமேஸ் காரின் எஞ்சின் அதிக பவரையும், மைலேஜையும் தரும் என்பதால் வாடிக்கையாளர்களின் கவனம் திசை திரும்ப அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹோண்டா உத்தரவாதம்

ஹோண்டா உத்தரவாதம்

மேலும், மாருதியின் சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் பிற கார் நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் விதமாக உடனடி சர்வீஸ் வசதியை வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

 பக்கா பிளான்

பக்கா பிளான்

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை அதிக நாள் காத்திருக்க விடாமல் உடனடியாக டெலிவிரி வழங்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஏற்கனவே அமேஸ் காரின் உற்பத்தியையும் துவங்கிவிட்டது. இதுவரை 10,000 கார்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வாரண்டி

வாரண்டி

அமேஸ் காருக்கு 2 ஆண்டுகள் வாரண்டியையும், 40,000 கிமீ.,க்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வழங்க இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

பிரியோவின் இன்டிரியருக்கும் அமேஸுக்கும் அதிக மாற்றங்கள் இருக்காது. வழக்கம்போல் ஹோண்டாவின் தரம் இதிலும் மிளிரும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மாருதி டிசையரை அடிப்படையாக வைத்து தற்போது அமேஸ் விலை நிர்ணயிப்பதில் ஹோண்டா கவனமாகவும், தீவீரமாகவும் ஈடுபட்டுள்ளது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலை முதல் அமேஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை கருதி ஹோண்டா தனது பிரிமியம் பிராண்டின் அந்தஸ்த்தை விலை நிர்ணயத்தில் எந்தளவு சமாதானப்படுத்திக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Japanese car maker Honda is eyeing on the mileage crazy Indian customers to change its fortunes as the revolutionary i-DTEC technology-fired Amaze promises a 26-km run on every litre of diesel.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X