ஹோண்டா அமேஸ் காரின் உற்பத்தி துவக்கம்: ஏப்ரல் 11ல் ரிலீஸ்!

By Saravana

அடுத்த மாதம் அமேஸ் கார் அறிமுகமாவது உறுதியாகியிருக்கிறது. டீலர் ஒன்றில் கூட அமேஸ் கார் வந்திறங்கியது குறித்தும் நாம் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அறிமுக தேதி குறித்து ஹோண்டா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தநிலையில், நொய்டாவிலுள்ள தனது ஆலையில் அமேஸ் காரின் உற்பத்தியை ஹோண்டா துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அமேஸ் அதிக வரவேற்பை பெறும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையுடன் காய் நகர்த்தி வருகிறது ஹோண்டா.

Honda Amaze

எனவே, டிசையர் டெலிவிரியில் ஏற்படும் கால தாமதத்தை போன்று வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத ஹோண்டா அமேஸ் இருப்பை கையில் அதிகமாக வைத்துக்கொண்டு முறைப்படி அமேஸை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

அமேஸ் உற்பத்திக்கு வழிவிடும் வகையில் ஜாஸ் காரின் உற்பத்தியை கூட ஹோண்டா நிறுத்திவிட்டது. இதுவரையிலும் 10,000 அமேஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹோண்டாவின் பெட்ரோல் கார்களின் எஞ்சின் மீது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வருகிறது. எனவே, ஹோண்டாவின் முதல் டீசல் காராக வரும் அமேஸ் மீதும் வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
Japanese car maker Honda has started Amaze production in India recently, sources said. The company is also planning to launch Amaze on 11th April.
Story first published: Friday, March 15, 2013, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X