ஏப்ரல் முதல் கார் விலையை உயர்த்தும் ஹோண்டா

By Saravana

உற்பத்தி செலவீனம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளதால்ஏப்ரல் முதல் கார் விலையை அதிகரிக்க இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவீனம், ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் அவ்வப்போது கார்களின் விலையை தயாரிப்பாளர்கள் உயர்த்தி வருகின்றன. இது வாடிக்கையாளர்களின் தலையில் அவ்வப்போது கூடுதல் சுமையை கொடுத்து வருகிறது.

Honda Brio

இந்த நிலையில், ஹோண்டா கார் நிறுவனம் தற்போது கார் விலையை 2 சதவீதம் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவீனமும், போக்குவரத்துக்கான செலவீனமும் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பதால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியிருக்கிறது.

ஏப்ரல் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Honda Cars India Ltd (HCIL) will increase prices of its vehicles across models by up to 2 per cent from April to offset cost of OBD (on-board diagnostics) compliance and freight increase.
Story first published: Thursday, March 14, 2013, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X