விபத்தா, ஆபத்தா... ஓடோடி வரும் ஹோண்டா!

கார் அல்லது மோட்டார்சைக்கிளில் செல்லும்போது விபத்து அல்லது ஆபத்தில் சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி உதவியை பெறும் வகையில், பிரத்யேக மொபைல்போன் அப்ளிகேஷனை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் மூலம் அவசர காலத்தில் சிக்கியிருக்கும் வாடிக்கையாளர்களின் இடத்தை துல்லியமாக கண்டறிந்து சென்று உதவிகள் வழங்கப்படும். இந்த அப்ளிகேஷன் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அப்ளிகேஷன்

அப்ளிகேஷன்

விபத்து அல்லது வாகனத்தில் திடீர் பழுது காரணமாக நடுவழியில் சிக்கியிருக்கும் வாடிக்கையாளர் மொபைல்போனிலிருந்து இந்த அப்ளிகேஷனை தொட்டவுன் உடனடியாக ஹோண்டாவின் அவசர சேவை உதவி மையத்துக்கு தகவல் பறக்கும்.

அவசர உதவி குழு

அவசர உதவி குழு

வாடிக்கையாளர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு, அங்கு ஹோண்டாவின் அவரச உதவி குழுவினர் விரைந்து வந்து உதவிகள் வழங்குவர்.

சேவைகள்

சேவைகள்

ஹோண்டாவின் பல்வேறு சேவைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பு, சர்வீஸ் பற்றி நினைவூட்டல் ஆகிய வசதிகளையும் இந்த அப்ளிகேஷன் வழியாக பெற முடியும்.

அப்படியே போகாதீங்க

அப்படியே போகாதீங்க

கார் அல்லது பைக் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும் குறித்த எச்சரிக்கை செய்தியையும் இந்த அப்ளிகேஷன் மூலம் மொபைல்போனில் பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு ஹோண்டாவின் கால் சென்டருக்கும் அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

இங்கிலாந்து ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். இந்த அப்ளிகேஷனை இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஹோண்டா அறிமுகம் செய்யும் என்று நம்புவோமாக...!!

Most Read Articles
English summary
In case you find yourself stranded in the middle of the highway or for that matter any other place, with a Honda car or motorcycle, Honda's new roadside assistance smartphone app will come to your aid.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X