புதிய 2.0 லி பெட்ரோல் எஞ்சினுடன் வந்த ஜாகுவார் எக்ஸ்எஃப் கார்!

By Saravana

புதிய பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் இரண்டுவிதமான டீசல் எஞ்சின் மற்றும் ஒரு பெட்ரோல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பேஸ் வேரியண்ட் பெட்ரோல் மாடல் எக்ஸ்எஃப் காரை ஜாகுவார் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

தற்போது 190 பிஎஸ் பவர் கொண்ட 2.2 லிட்டர் டீசல் மற்றும் 275 பிஎஸ் பவர் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. தவிர, 510 பிஎஸ் பவர் கொண்ட 5.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படுகிறது.

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 240 பிஎஸ் பவரையும், 340 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

புதிதாக வந்திருக்கும் பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக லிட்டருக்கு 10.8 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிரந்தர அம்சங்கள்

நிரந்தர அம்சங்கள்

ஸினான் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகல், 17 இஞ்ச் லிப்ரா அலாய் வீ்ல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

மரவேலைப்பாடுகள் நிறைந்த இன்டிரியர், சன் ரூஃப், டிவி ட்யூனர், ரியர் வியூ கேமரா, நேவிகேஷன், பாதசாரிகளை கண்டறியும் தொழில்நுட்பம், பக்கவாட்டில் ஏர்பேக்குகள் என பல அம்சங்களை கொண்டுள்ளது. டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்கள், 7 இஞ்ச் கலர் டிஸ்ப்ளே ஆகியவையும் உள்ளன.

விலை

விலை

ஆடி ஏ6 காரின் 2.8 எஃப்எஸ்ஐ மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களுக்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய பேஸ் வேரியண்ட் ஜாகுவார் எக்ஸ்எஃப் கார் ரூ.48.30 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 17 ஜாகுவார் ஷோரூம்களில் இந்த கார் இன்றுமுதல் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary

 Jaguar has introduced the entry level variant of the XF saloon in India. The new Jaguar XF Luxury variant comes with a Ford 2.0 liter EcoBoost engine. The same engine also powers the XJ base variant.
Story first published: Monday, January 6, 2014, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X