ரூ.1.09 கோடியில் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் அறிமுகம் - முழு விபரம்

By Saravana

இரண்டாம் தலைமுறை ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் ஆடம்பர எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நியூயார்க் நகரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய மார்க்கெட்டிலும் தடம் பதித்துள்ளது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட். எஞ்சின், விலை, மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

முந்தைய மாடலைவிட இந்த புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார் 420 கிலோ எடை குறைவானது. கிரவுன்ட் கிளியரன்ஸ் 278 மிமீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, தேவைப்படும்பட்சத்தில் மேலும் 51 மிமீ கூட்டிக் கொள்ளலாம். இதுதவிர, டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் கொண்டிருப்பதால் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 292 எச்பி ஆற்றலையும், 600 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 510 எச்பி ஆற்றலையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை டீசல் மாடல் 7.2 வினாடிகளிலும், பெட்ரோல் மாடல் 5.3 வினாடிகளிலும் தாண்டிவிடும். டீசல் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 222 கிமீ வேகத்திலும், பெட்ரோல் மாடல் 250 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

டீசல் மாடல் லிட்டருக்கு 13.33 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 7.8 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை

விலை

பெட்ரோல் மாடல் ரூ.1.66 கோடி விலையிலும், டீசல் மாடல் ரூ.1.1 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காருக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தற்போது 9 மாதங்கள் காத்திருப்பு காலம் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Most Read Articles
English summary
Tata motors owned British luxury suv maker Land Rover has launched second generation Range Rover Sport luxury SUV in Indian market at INR.1.09 Cr.
Story first published: Friday, October 18, 2013, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X