மேட் இன் இந்தியா டஸ்ட்டருக்கு தவம் கிடக்கும் இங்கிலாந்துக்காரர்கள்!

By Saravana
Reno Duster
கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை 19,000க்கும் அதிகமான டஸ்ட்டர்களை ரெனோ விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் முதல் இந்தியாவிலிருந்து டஸ்ட்டரை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது ரெனோ. முதல் லாட்டில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம்(இந்தியாவில் 4 வீல் சிஸ்டம் இன்னும் அறிமுகமாகவில்லை) கொண்ட 350 டஸ்ட்டர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மேலும், 9,000 பவுண்ட் என்ற மிக குறைவான விலையில் பேஸ் வேரியண்ட் அங்கு அறிமுகமானதால் டஸ்ட்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அக்செஸ் என்ற பெயரில் அறிமுகமான பேஸ் வேரியண்ட்டில் இத்தனைக்கும் ஏசி, மியூசிக் சிஸ்டம் ஆகியவை கிடையாது. இந்த வேரியண்ட்டுக்குத்தான் தற்போது 5 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நீள்கிறது.

இதுதவிர, மொத்தமாக அங்கு இதுவரை 10,000 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்திலும் டஸ்ட்டரின் காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மேட் இன் இந்தியா டஸ்ட்டருக்கு இங்கிலாந்துக்காரர்கள் முன்பதிவு செய்து 5 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
The Renault Duster has been a runaway success for the French manufacturer in Indiaand now the same is happening in the England. The Duster now has a five-month waiting period in England.
Story first published: Tuesday, January 29, 2013, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X