குவான்ட்டோ, எக்ஸ்யூவி உற்பத்தியை கூட்டிய மஹிந்திரா

குவான்ட்டோ, எக்ஸ்யூவி மற்றும் ரெக்ஸ்டன் கார்களின் உற்பத்தியை கணிசமாக உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா. குறைந்த விலையில் மினி எஸ்யூவியாக களமிறக்கப்பட்ட குவான்ட்டோ காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதேபோன்று, எக்ஸ்யூவி மற்றும் ரெக்ஸ்டன் கார்களுக்கும் நல்ல புக்கிங் எண்ணிக்கை கிடைத்துள்ளதால், காத்திருப்பு காலத்தை குறைக்கும் விதமாக தற்போது உற்பத்தி கூட்டப்பட்டிருக்கிறது.

குவான்ட்டோ

குவான்ட்டோ

மினி எஸ்யூவியாக மார்க்கெட்டில் களமிறங்கிய குவான்ட்டோ அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு மாதங்களில் 12,000 முன்பதிவுகளை பெற்றது. தொடர்ந்து குவான்ட்டோவுக்கான புக்கிங் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, குவான்ட்டோ உற்பத்தியை மாதத்திற்கு 3,500 என்ற அளவில் மஹிந்திரா கூட்டியிருக்கிறது.

எக்ஸ்யூவி 500

எக்ஸ்யூவி 500

அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் எக்ஸ்யூவி 500வுக்கான வரவேற்பு தொடர்ந்து அதே வேகத்தில் இருக்கிறது. காத்திருப்பு காலமும் நீள்வதால் உற்பத்தியை கூட்டியிருக்கிறது மஹிந்திரா. தற்போது எக்ஸ்யூவியின் உற்பத்தியை மாதத்திற்கு 4,500 என்ற எண்ணிக்கை அளவில் மஹிந்திரா உயர்த்தியிருக்கிறது.

ரெக்ஸ்டன்

ரெக்ஸ்டன்

சாங்யாங் ரெக்ஸ்டனுக்கு எதிர்பாராத அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட ரெக்ஸ்டன் போட்டிகளை சமாளித்து இதுவரை 1,500 புக்கிங்குகளை பெற்றுள்ளது. எனவே, ரெக்ஸ்டன் உற்பத்தியை மாதத்திற்கு 500 என்ற அளவில் மஹிந்திரா அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Mahindra & Mahindra today announced that it had hiked the capacities of some its best selling brands with immediate effect. This has been necessitated due to the overwhelming demand for the Quanto, XUV500 and Rexton across the country.
Story first published: Wednesday, January 16, 2013, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X