கூடுதல் ரேஞ்ச், பவர் ஸ்டீயரிங்குடன் புதிய மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் கார் அறிமுகம்

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரின் பிரிமியம் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இ2ஓ பிரிமியம் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படுகிறது.

புதிய இ2ஓ எலக்ட்ரிக் காரின் முக்கிய அம்சமாக இதன் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தவிர, ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்ட எலக்ட்ரிக் காராகவும் உள்ளது.


கூடுதல் விபரங்கள்

கூடுதல் விபரங்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் முக்கிய தகவல்களை காணலாம்.

 ரேஞச் அதிகரிப்பு

ரேஞச் அதிகரிப்பு

இ2ஓ எலக்ட்ரிக் காரின் 80 கிமீ தூரம் வரை இருந்த ரேஞ்ச் இப்போது, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் செல்லும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 பவர் ஸ்டீயரிங்

பவர் ஸ்டீயரிங்

பவர் ஸ்டீயரிங் இல்லை என்ற குறை போக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண் வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும்.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

இதுதவிர, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 சார்ஜ் நிலையங்கள்

சார்ஜ் நிலையங்கள்

டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் கூடுதல் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை நிறுவவுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நகரங்களில் 300 சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக 100 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.

 பேட்டரி வாடகை திட்டம்

பேட்டரி வாடகை திட்டம்

"குட்பை ஃப்யூல், ஹலோ எலக்ட்ரிக்" என்ற புதிய பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் இந்த புதிய மாடல் கிடைக்கும். காருக்கான விலையை மட்டும் செலுத்திக் கொண்டு பேட்டரிக்காக மாதாமாதம் பராமரிப்பு கட்டணம் செலுத்தும் விதத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்ரோடு விலை

ஆன்ரோடு விலை

இதன்படி, புதிய இ2ஓ பிரிமியம் எலக்ட்ரிக் கார் மாடல் ரூ.5.72 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும். பேட்டரிக்காக மாதாமாதம் ரூ.2,999 செலுத்த வேண்டும். இந்த வாடகைத் திட்டத்தின்படி 50,000 கிமீ அல்லது 5 ஆண்டுகளுக்கு பேட்டரியை பயன்படுத்த முடியும்.

Most Read Articles
English summary
Mahindra had launched its first all electric vehicle in the form of the e2o last year. The Indian manufacturer has now launched a more premium variant of its electric vehicle, called the e2o Premium.
Story first published: Friday, August 22, 2014, 13:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X