இரட்டை பவருடன் பிளிரும் புதிய மெக்லாரன் சூப்பர் கார்!

ஃபெராரி எஃப் 150 காருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் புதிய பி1 சூப்பர் காரை ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த இருக்கிறது மெக்லாரன். மெக்லாரனின் எஃப்1 காருக்கு மாற்றாக இந்த புதிய சூப்பர் கார் அறிமுகமாகிறது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரட்டை பவருடன் அசத்தப்போகும் இந்த காரின் விஷேசம் என்ன தெரியுமா?

இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார் முழு பவரையும் உடனடியாக வெளிப்படுத்தும் பிரத்யேக தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வர இருக்கும் சூப்பர் கார்களின் பட்டியலில் தற்போது பி1 காரும் இணைந்துள்ளது. பஹரைனில் எடுக்கப்பட்ட இந்த புதிய காரின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 3.8 ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டும் சேர்த்து ஒரே நேரத்தில் 903 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்ரோல் எஞ்சின் எம்பி4 - 12சி காரின் எம் 838டி பெட்ரோல் எஞ்சின்தான். ஆனால், மேம்படுத்தப்பட்டு இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 727 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 எலக்ட்ரிக் மோட்டார்

எலக்ட்ரிக் மோட்டார்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 176 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

 இன்ஸ்டன்ட் பவர் அசிஸ்ட் சிஸ்டம்

இன்ஸ்டன்ட் பவர் அசிஸ்ட் சிஸ்டம்

இந்த காரில் இருக்கும் புதிய பவர் அசிஸ்ட் தொழில்நுட்பம் எலக்ட்ரிக் மோட்டாரின் முழு சக்தியையும் உடனே வெளிப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற வீல்களுக்கு சிறப்பான பவரை செலுத்தும் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

இ-மோட்

இ-மோட்

பெட்ரோல் எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு இந்த காரை வெறும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயக்க முடியும்.

 பயண தூரம்

பயண தூரம்

எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்போது இந்த கார் அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

 பேட்டரி

பேட்டரி

இதன் பேட்டரி வெறும் 96 கிலோ எடை கொண்டது. அதேவேளை, மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

 புகை வெளியீடு

புகை வெளியீடு

இந்த கார் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்போது கிலோமீட்டருக்கு 200 கிராம் கார்பனை மட்டும் வெளியிடும்.

அறிமுகம்

அறிமுகம்

இந்த புதிய மெக்லாரன் சூப்பர் கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Its official. McLaren has announced that its McLaren F1 successor - McLaren P1 will use a hybrid powerplant. The automaker has released the information ahead of its official debut at the Geneva Motor Show. This announcement follows a series of official image previews released over the past weeks, revealing the interior of the car, as well as beauty shots taken in Bahrain.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X