இந்தியாவில் புதிய பென்ஸ் ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி கார் விற்பனைக்கு வந்தது!

By Saravana

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வழங்கும் ஏஎம்ஜி பாடி கிட் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

மேலும், இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 8வது மாடல் இது. இந்த புதிய மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் டீகெல் காரின் தோற்றத்திற்கு கவர்ச்சி கூட்டுவதுடன் சாதாரண ஜிஎல்ஏ மாடலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. சாதாரண ஜிஎல்ஏ மாடலைவிட அதிக மாற்றங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீஸ் உள்ளன. புதிய முகப்பு கிரில், க்வாட் எக்ஸ்சாஸ்ட் பைப்புகள், சைடு ஸ்கர்ட், ரியர் டிஃபியூசர், 19 இஞ்ச் அலாய் வீல்கள், சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் போன்றவை வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். உட்புறத்தில் ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், சிவப்பு நிற சீட் பெல்ட்டுகள், தையல்வேலைப்பாடு கொண்ட டேஷ்போர்டு ஃபினிஷிங் போன்றவை சாதாரண மாடலிலிருந்து வேறுப்படுத்தும் அம்சங்கள்.

 எஞ்சின்

எஞ்சின்

ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்ப்டடுவிட்ட சிஎல்ஏ 45 ஏஎம்ஜி காரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 360 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும். தற்போது உலகின் அதிசக்திவாய்ந்த 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினாக குறிப்பிடப்படுகிறது.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த காரின் செயல்திறனை சிறப்பாக்கும் விதத்தில் ஏஎம்ஜி.,யின் ஸ்பீட்ஷிப்ட் டிசிடி 7 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண ஜிஎல்ஏ மாடல் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. ஆனால், இந்த புதிய ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மாடல் 4 - மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

அதிகபட்சமாக மணிக்கு 249 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் போட்டிபோடும். யூரோ-6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட இந்த மாடல் லிட்டருக்கு 15.98 கிமீ மைலேஜ் தரும் என்பது ஆச்சரியத் தகவல்.

விலை

விலை

ரூ.69.60 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
German luxury car maker Mercedes Benz India has launched GLA 45 AMG, high performance AMG version of GLA compact Crossover, at price of Rs. Rs. 69.60 lakhs (ex-showroom Mumbai).
Story first published: Monday, October 27, 2014, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X