ரூ.1.57 கோடியில் விற்பனைக்கு வந்தது புதிய பென்ஸ் எஸ் கிளாஸ்!

By Saravana

டெல்லியில் நடந்த விழாவில் 2014 மாடல் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. உயர்ரகத்தில் வந்திருக்கும் இந்த புதிய சொகுசு காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

மேபேக் காரின் தோற்றத்தை நினைவூட்டும் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் ஏராளமான சொகுசு அம்சங்கள் நிறைந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெட்ரோலில் மட்டும்

பெட்ரோலில் மட்டும்

தற்போது பெட்ரோல் மாடலில் மட்டுமே புதிய எஸ் கிளாஸ் கார் வந்துள்ளது. இது இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு இறுதியில் டீசல் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. டீசல் மாடல் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனைக்கு செல்லும்.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது வந்துள்ள எஸ்500 பெட்ரோல் மாடலில் 469 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.6 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

இந்த காரில் 24 ஸ்பீக்கர்கள் கொண்ட 1540 வாட் பர்ம்ஸ்டர் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஸ் கிளாஸ் காரில் மேஜிக் பாடி கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை. தனி நபர்கள் ரேடார் பயன்படுத்துவதற்கு நம் நாட்டில் அனுமதி இல்லை என்பதால், இதில் ஏர்- சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ரேடார் சிஸ்டம் மூலம் சாலையின் தன்மையை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் சஸ்பென்ஷன் அமைப்பை மாற்றிக் கொள்ளும் மேஜிக் பாடி கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இந்த கார் வெளிநாடுகளில் கிடைக்கிறது. மேலும், இந்த சஸ்பென்ஷனுக்காக கோழிகளை வைத்து பென்ஸ் ஒரு விளம்பரத்தை வெளியிட்டதும் நினைவிருக்கலாம்.

எல்இடி விளக்குகள்

எல்இடி விளக்குகள்

இந்த காரில் ஒரு இடத்தில் கூட சாதாரண விளக்குகள் பயன்படுத்தப்படவில்லை. முழுவதும் எல்இடி விளக்குகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மசாஜ் இருக்கை

மசாஜ் இருக்கை

பயணிகளுக்கு மசாஜ் செய்யும் வசதி கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுமாம்.

விலை

விலை

ரூ.1.57 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கிடைக்கும். முதல் லாட்டில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 125 கார்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X