மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் கிராண்ட் எடிசன் அறிமுகம்!!

புனேயிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் இன்று 50,000வது கார் உற்பத்தியானது. இதன்மூலம், இந்த புதிய மைல்கல்லை தொட்ட முதல் சொகுசு கார் நிறுவனம் என்ற பெருமையை பென்ஸ் பெற்றுள்ளது.

இதை புதிய மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் விதத்தில் ஸ்பெஷல் எடிசன் மாடல் சி கிளாஸ் காரையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் சி கிளாஸ் கார்தான் 50,000வது காராக உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது. இதற்காக, நடந்த நிகழ்ச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியப் பிரிவுக்கான தலைவர் எபர்ஹார்டு கெர்ன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கிராண்ட் எடிசன் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய சொகுசு காரில் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கிராண்ட் எடிசன் காரில் கண்ணாடி கூரை, ஏஎம்ஜி பாடி கிட், புதிய ரேடியேட்டர் கிரில், ரியர் பம்பர் ஸ்பாய்லர்கள், சைடு ஸ்கர்ட், 17 இஞ்ச் அலாய் வீல்கள், டியூவல் டோன் இண்டிரியர், கிராண்ட் எடிசன் பேட்ஜ் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஸ்பெஷல் எடிசன் மாடல்கள்

ஸ்பெஷல் எடிசன் மாடல்கள்

சி200 ஜிஇ என்ற பெட்ரோல் மாடலிலும், சி200 சிடிஐ என்ற டீசல் மாடலிலும் சி கிளாஸ் கிராண்ட் எடிசன் கார் வந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 186 பிஎஸ் பவரையும், 285 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 170 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.2 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டிலும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது.

விலை

விலை

பெட்ரோல் மாடல் ரூ.36.81 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.39.16 லட்சத்திலும் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

10 மாடல்கள்

10 மாடல்கள்

இந்த ஆண்டு 10 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 85 சதவீத கார் மாடல்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதாகவும் பென்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz today rolled out the 50,000th vehicle, a C-Class, from its Chakan manufacturing facility becoming the only foreign luxury car manufacturer in the country to do so. To celebrate reaching this milestone the German automaker launched the C-Class Grand Edition.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X