உலகின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தும் பென்ஸ்

By Saravana
Benz A45 AMG
உலகின் மிக பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளது.

பிஎம்டபிள்யூவின் அங்கமான பிரிட்டிஷ் பிராண்டான மினி நிறுவனத்தின் மினி கூப்பர்தான் தற்போது உலகின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காராக கருதப்படுகிறது.

இந்த காருக்கு போட்டியை கொடுக்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டான ஏஎம்ஜி நிறுவனம் புதிய பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காரை களமிறக்க உள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த புதிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 360 பிஎச்பி ஆற்றலையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் இந்த கார் தொட்டுவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். இத்துனை பவர்ஃபுல் எஞ்சின் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தரும் என்பதே இதன் விஷேசம்.

இதனிடையே, இந்த பவர்ஃபுல் ஹேட்ச்பேக் காருக்காக சோனி பிளேஸ்டேஷன்-4 ல் பிரத்யேக வீடியோ விளையாட்டை எவொலியூசன் ஸ்டூடியோ உருவாக்கியிருக்கிறது.

Most Read Articles
English summary
German luxury car maker Mercedes Benz to unveil world powerful hatchback car A 45 AMG at the Geneva Motor Show which opens on March 5.
Story first published: Saturday, February 23, 2013, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X