எக்ஸ் வரிசையில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் பிஎம்டபிள்யூ

By Saravana

எக்ஸ் வரிசையில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது. எக்ஸ்4 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 எஸ்யூவி மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. விலையிலும் அப்படித்தான் இருக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த தகவலை பிஎம்டபிள்யூ வெளியிட்டுள்ளது.

எக்ஸ்3 எஸ்யூவியின் பிளாட்பார்மில்தான் புதிய எக்ஸ்4 வடிவமைக்கப்பட உள்ளது. எஃப்26 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்த எஸ்யூவி 4650மிமீ நீளம் கொண்டதாக இருக்கும்.

BMW X4

பிஎம்டபிள்யூ இந்த புதிய காரை எஸ்யூவி என்பதற்கு பதிலாக ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டி வெகிக்கிள்(எஸ்ஏவி) என குறிப்பிட்டுள்ளது. மேலும், எக்ஸ்3 எஸ்யூவியில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்சின்கள்தான் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட இருக்கிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் இந்த எஸ்யூவி தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 25 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், அதில் 10 மாடல்கள் புத்தம் புதிய மாடல்களாக இருக்கும் என்று கூறியுள்ளது பிஎம்டபிள்யூ.

Most Read Articles
English summary
BMW will introduce a new member to its ‘X' SUV family in 2014. The BMW X4, however, is being called an SAV, standing for Sports Activity Vehicle. The announcement was made by Dr. Norbert Reithofer, chairman of the Board of Management of BMW AG during the annual press conference.
Story first published: Saturday, March 23, 2013, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X