இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய லம்போ ஹூராகென்!

By Saravana

இந்தியாவில் புதிய லம்போர்கினி ஹூராகென் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய சூப்பர் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டது.

கல்லார்டோ காருக்கு மாற்றாக வந்திருக்கும் இந்த புதிய கார் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 1,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலும் இந்த கார் தடம் பதித்துள்ளது. இதன் விலை உள்ளிட்ட சில முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


 ஸ்டைல்

ஸ்டைல்

லம்போர்கினியின் அவென்டேடார் காரின் டிசைனை பல விஷயங்களில் ஒத்திருந்தாலும், தனக்கென சில தனித்துவங்களை பெற்றிருக்கிறு. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் இந்த காருக்கு மிகுந்த கவர்ச்சியை அளிக்கிறது. இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய சேஸீ

புதிய சேஸீ

கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினிய கலவையிலான ஹைபிரிட் சேஸீ பொருத்தப்பட்டிருக்கிறது. இது கல்லார்டோ காரின் சேஸீயைவிட 10 சதவீதம் எடை குறைவானது என்பதுடன் 50 சதவீதம் கூடுதல் உறுதித்தன்மை கொண்டது.

 வடிவம்

வடிவம்

இந்த புதிய லம்போர்கினி சூப்பர் கார் 4,459 மிமீ நீளமும், 2,236 மிமீ அகலுமும், 1,165 மிமீ உயரமும் கொண்டது. 20 இஞ்ச் பைரேலி வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

லம்போர்கினி ஹூராகென் காரில் 610 பிஎஸ் பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீட் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இதன் எஞ்சின் யூரோ-6 மாசுக்கட்டுப்பாட்டு தரநிர்ணயம் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த அதிசக்திவாய்ந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டும் வல்லமையுடையது. மணிக்கு 325 கிமீ டாப்ஸ்பீடு கொண்ட இந்த ஹூராகென் வெறும் 10 வினாடிகளில் 0- 350 கிமீ வேகத்தை எட்டவல்லது. 100 கிமீ செல்வதற்கு 12.5 லிட்டர் எரிபொருளை விழுங்கும்.

விலை

விலை

ரூ.3.43 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
The Italian automobile manufacturer Lamborghini has launched the Huracan in India at Rs 3.43 crore (ex-showroom, Delhi)
Story first published: Monday, September 22, 2014, 16:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X