உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு: கார் விலையை உயர்த்திய நிசான்

By Saravana

மைக்ரா, சன்னி கார்களின் விலையை உயர்த்தியிருக்கிறது நிசான். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

பல்வேறு காரணங்களால் கார்களுக்கான உற்பத்தி செலவீனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அவ்வப்போது கார் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி வருகின்றனர்.

பெரும்பான்மையான நிறுவனங்கள் ஜனவரியில் விலை உயர்வை அறிவித்துவிட்ட நிலையில், நிசான் கார்களின் விலை 1ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாடல்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கின்றன. மைக்ரா விலையை 1.5 சதவீதமும், சன்னி விலையை 2 சதவீதமும், எவாலியா விலையை 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து நிசான் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனர் நிதிஷ் டிபின்ஸ் கூறுகையில், " வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பம் கொண்ட தயாரிப்புகளை வழங்கி வருகிறோம். ஆனால், ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்களால் வருவாயில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும், உற்பத்தி செலவீனம் கடுமையாக அதிகரித்துள்ளது. எனவேதான், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படுத்தாத அளவில் கார்களின் விலையை உயர்த்தியிருக்கிறோம்," என்றார்.

Most Read Articles
English summary
Nissan today announced a price increase for three of its models in India in response to rising input costs. The increase, which applies to all variants, ranges from 1.5% to 2.5% and will be effective from February 1, 2013.
Story first published: Tuesday, February 5, 2013, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X