நிசான் எவாலியாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்

By Saravana

நிசான் எவாலியாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிசான் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் புதிய மாடலின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முகப்பில் மாற்றங்களுடன், கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய நிசான் எவாலியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.


புதிய முகம்

புதிய முகம்

முகப்பில் நிசான் நிறுவனத்தின் ஆஸ்தான வி வடிவ கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குரோம் கிரில் எவாலியாவுக்கு புதிய கவர்ச்சியை தருகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள், தனி ஏசி வென்ட்டுகள், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் ஃபாக்ஸ்வுட் மர தகடுகள் மூலம் அழகு கூட்டப்பட்டிருக்கிறது. புதிய மிதியடிகள், கிளவ் பாக்ஸ் டிசைனில் மாறுதல் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார் போன்ற முக்கிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 86 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். லிட்டருக்கு 19.3 கிமீ மைலேஜ் தரும் என நிசான் தெரிவிக்கிறது.

விலை

விலை

நிசான் எவாலியா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலையில் மாற்றங்கள் இல்லை. பழைய விலையிலேயே இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும். நிசான் எவாலியா கார் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.10.67 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

கைகொடுக்குமா?

கைகொடுக்குமா?

மோசமான விற்பனை காரணமாக எவாலியாவில் தொடர்ந்து மாற்றங்களை செய்து நிசான் அறிமுகம் செய்து வருகிறது. மேலும், ஹோண்டா மொபிலியோ, டட்சன் கோ ப்ளஸ் உள்ளிட்ட எம்பிவி கார்களின் வருகையால் எவாலியாவுக்கு நெருக்கடி இன்னும் அதிகரிக்கும் நிலை இருக்கிறது. எனவே, இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடலாவது எவாலியாவின் விற்பனையில் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Nissan India recently launched its new Sunny and have now updated its Evalia MPV. They have introduced the Evalia with minor design changes. The interesting aspect is that they have not increased the prices of its vehicle.
Story first published: Saturday, July 19, 2014, 15:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X