Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இதுதான் பியூஜியட் மினி எஸ்யூவி... டஸ்ட்டரை ஓரங்கட்டுமா..?

Posted by:
Updated: Friday, January 18, 2013, 12:49 [IST]

ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தால் கூட இந்த பீஜோ மினி எஸ்யூவியின் டிசைனில் குறை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மிக நேர்த்தியான, கம்பீரமான வடிவமைப்புடன் கிராஸ்ஓவர் ரகத்தில் புதிய மினி எஸ்யூவியை பிரெஞ்சு கார் நிறுவனமான பீஜோ அறிமுகம் செய்துள்ளது. பீஜோ 2008 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மினி எஸ்யூவி 4.18 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் இந்த ஆண்டில் பீஜோ 2008 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

70 பிஎச்பி திறன் கொண்ட 1.4 லிட்டர் எச்டிஐ டீசல் எஞ்சின் மற்றும் 90 பிஎச்பி திறன் கொண்ட 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இரண்டு டீசல் மாடல்களில் கிடைக்கும். இதேபோன்று, 82 பிஎச்பி திறன் கொண்ட 1.2 லிட்டர், 95 பிஎச்பி திறன் கொண்ட 1.4 லிட்டர், 120 பிஎச்பி திறன் கொண்ட 1.6 லிட்டர் விடிஐ, மற்றும் 156 பிஎச்பி திறன் கொண்ட 1.6 லிட்டர் டிஎச்பி என 4 விதமான பெட்ரோல் எஞ்சின்களை கொண்ட மாடல்களில் கிடைக்கும். தற்காலத்துக்கு ஏற்ற வகையில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் பீஜோ 2008. ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு நேரடி போட்டியாளனாக இருக்கும். ஆனால், இந்திய மார்க்கெட்டில் இறங்கும் திட்டத்தை பீஜோ கைவிட்டுள்ளதால், டஸ்ட்டருக்கு இப்போதைக்கு பீஜோ 2008 எஸ்யூவியால் போட்டி இருக்காது.

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

பீஜோ 2008 மினி எஸ்யூவி - படங்கள்

Story first published:  Friday, January 18, 2013, 12:39 [IST]
English summary
French car maker Peugeot has launched its new urban crossover vehicle called '2008' in Paris recently.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Auto Talk Forum