ரூ.5.99 லட்சத்தில் பவர்ஃபுல் விஸ்டா கார்: டாடா அறிமுகம்!

கூடுதல் டர்போசார்ஜர்களுடன் ஆற்றல் வாய்ந்த எஞ்சினுடன் புதிய டீசல் விஸ்டா காரை டாடா மோட்டார்ஸ் சற்றுமுன் அறிமுகம் செய்தது. டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த விழாவில் விஸ்டா டி90 என்ற பெயரில் இந்த புதிய பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

எஞ்சின் மட்டுமில்லாமல் இன்டிரியர் மற்றும் சில கூடுதல் அம்சங்களுடன் புதிய விஸ்டா வந்திருக்கிறது. 90 பிஎச்பி ஆற்றல் கொண்ட ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபியட் புன்ட்டோ வரிசையில் தற்போது டாடா விஸ்டா காரும் இணைந்துள்ளது. புதிய விஸ்டாவில் இருக்கும் எஞ்சின் பற்றிய தகவல்கள், கூடுதல் அம்சங்கள் மற்றும் விலை விபரம் உள்ளிட்ட தகவல்களையும், கடைசில் ஸ்லைடரில் விஸ்டாவின் சிறப்புகளை காணொளியில் காணலாம்.

டர்போசார்ஜர்

டர்போசார்ஜர்

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டீசல் மாடல் விஸ்டா காரில் 74 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்த எஞ்சின் வேரியபிள் ஜியோமெட்ரி டர்போசார்ஜர்(விஜிடி) உதவியுடன் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆற்றல்

ஆற்றல்

புதிய விஸ்டா டி90 காரின் எஞ்சின் 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதோடு, 200என்எம் திருகு விசையையும் கொடுக்கும்.

 கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

புதிய பம்பர், டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்பாய்லர் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதனால், சாதாரண மாடலைவிட அதிக ஸ்போர்ட்டி லுக் கொண்டாக காராக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் சிஸ்டமும், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை மான்ஸா செடானிலிருந்து பெறப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

5 வண்ணங்களில் புதிய விஸ்டா டி90 விற்பனைக்கு கிடைக்கும். இன்று அறிமுகம் செய்யப்பட்ட விஸ்டா டி90 அல்ட்ரா வயலெட் கலரில் இருந்தது.

முக்கிய மாற்றம்

முக்கிய மாற்றம்

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் தற்போது ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் மாற்றப்பட்டுள்ளது. பின்புற இருக்கையிலும் தற்போது சார்ஜிங் பாயிண்ட் இருக்கிறது.

 வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

வசதிகளை பொறுத்து விஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற இரு வேரியண்ட்களில் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பவர் விண்டோஸ் மற்றும் டூயல் ஏர்பேக்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

விலை

விஸ்டா டி90 விஎக்ஸ்

ரூ.5.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம்

விஸ்டா டி90 இசட்எக்ஸ்

ரூ.6.83 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம்

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புளூடூத் மூலம் 5 மொபைல்போன்களை இணைத்துக் கொள்ளும் வசதி, அட்வான்ஸ்டு டிரைவல் இன்பர்மேஷன் சிஸ்டம், இன்டலிஜென்ட் ரியர் வைப்பர், வாய்மொழி தகவல் தரும் ஜிபிஎஸ் சிஸ்டம் ஆகியவை கூடுதல் வசதிகளாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Tata Motors has launched the new Tata Indica Vista D90, a turbocharged and sporty version of its best selling Indica hatchback. The new Tata Indica Vista D90 has been unveiled at the Buddh International Circuit in Noida. The new car will hit showrooms with a price tag of INR 5.99 lakhs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X