ரூ.5.76 லட்சத்தில் விற்பனைக்கு வந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் கிராஸ்ஓவர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. லிவா ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய கிராஸ்ஓவர் கார் பிரேசில் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆஃப் ரோடர் தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த புதிய கிராஸ்ஓவர் ரக கார் நகர்ப்புற பயன்பாட்டிற்கும் சிறப்பானதாக இருக்கும். காம்பெக்ட் எஸ்யூவியை விரும்புபவர்களுக்கு இந்த புதிய மாடலும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபியட் அவென்டியூரா கிராஸ்ஓவர் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் படிக்கலாம்.

சிறப்பம்சங்கள் லிஸ்ட்

சிறப்பம்சங்கள் லிஸ்ட்

புதிய டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் என்ற இந்த புதிய கிராஸ்ஓவர் காரில் இருக்கும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

90 எச்பி பவர் மற்றும் 132 என்எம் டார்க்கை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்

80 எச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்

68 எச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்

அனைத்து மாடல்களும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

1.5 லி பெட்ரோல் - 16.78 கிமீ/லி

1.2 லி பெட்ரோல் - 17.71 கிமீ/லி

1.4 லி டீசல் - 23.59 கிமீ/லி

பாடி கிட்

பாடி கிட்

சில்வர் கலரிலான நட்ஜ் கார்டு, காரை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகள் காரின் தோற்றத்தை மாற்றுவதில் முக்கியமான ஆக்சஸெரீஸ்கள், இதுதவிர, ரூஃப் ரயில்கள், ரியர் வியூ கண்ணாடியில் இண்டிகேட்டர்கள், பனி விளக்குகள், 15 இஞ்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் சிறப்பு ஆக்சஸெரீஸ்களாக கூறலாம்.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

எட்டியோஸ் கிராஸ் பேட்ஜ், ரியர் ஸ்பாய்லர், சிறிய மாற்றங்களுடன் கூடிய டெயில் லைட்டுகள், கவர்ச்சியான கிளாடிங்குகளுடன் பம்பர் பகுதி என பின்புறத் தோற்றமும் கவர்ச்சியாக இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

பியானோ பிளாக் சென்டர் கன்சோல், லோகோ பொறிக்கப்பட்ட ஃபேப்ரிக் சீட் கவர், புளூடூத், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் இன் ஆகிய வசதிகள் கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம், லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் அதில் கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற சிறப்பம்சங்களை இன்டிரியரில் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், டிரைவர் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

அல்ட்ராமரைன் புளூ, கிளாசிக் கிரே, சிம்பொனி சில்வர், செலஸ்டியல் பிளாக், வெள்ளை, வெர்மில்லியன் ரெட், ஹார்மோனி பீஜ், இன்ஃபெர்னோ ஆரஞ்ச் என்ற படத்தில் உள்ள வண்ணம் ஆகிய பல வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

பெட்ரோல்

வி வேரியண்ட் (1.5 லி பெட்ரோல்): ரூ.7.35 லட்சம்

ஜி வேரியண்ட் (1.2 லி பெட்ரோல்): ரூ.5.76 லட்சம்

டீசல்(1.4 லிட்டர் எஞ்சின்)

விடி வேரியண்ட்: ரூ.7,40,640

ஜிடி வேரியண்ட்: ரூ.6,90,432

Most Read Articles
English summary
The new Etios Cross has been officially launched in India for a starting price of INR 5,76,000. The crossover version of the Etios Liva hatch, it was first revealed at the Auto Expo 2014 in February. Toyota already has the Etios Cross on sale in Brazil.
Story first published: Thursday, May 8, 2014, 9:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X