மனதை மயக்கும் டொயோட்டாவின் புதிய நவநாகரீக கான்செப்ட் கார்!

புதிய கான்செப்ட் கார்களை பேஷன் டிசைனர்கள் வடிவமைக்கும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. தற்போது பல கார் நிறுவனங்கள் பிரபல பேஷன் டிசைனர்களுடன் கைகோர்த்து புதிய கான்செப்ட் கார்களை வடிவமைக்கின்றன. இதேபோன்று, பிரான்ஸ் நாட்டின் பிரபல பேஷன் டிசைனரான ஜீன் மேரி மசாத்துடன் இணைந்து டொயோட்டா கார் நிறுவனம் புதிய கான்செப்ட் காரை வடிவமைத்துள்ளது.

மீ.வீ(Me.We) என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய நவநாகரீக கான்செப்ட் கார் தனி நபர் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அம்சங்கள் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பாரிஸில் உள்ள டொயோட்டா ஷோரூமில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்கள் மற்றும் டொயோட்டாவின் புதிய கான்செப்ட் காரின் அசத்தலான படங்களை ஸ்லைடரில் காணலாம்.

லைட் வெயிட் பாடி

லைட் வெயிட் பாடி

இதன் பாடி இலகு எடை கொண்டதாக இருக்கும் வகையில் அலுமினியம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் விருப்பம்போல் பிற பொருட்களாலும் இதன் பாடியை கட்டமைத்துக் கொள்ளலாம்.

மூங்கில் கட்டமைப்பு

மூங்கில் கட்டமைப்பு

அலுமினியம் தவிர இந்த காரை மூங்கில்களை கொண்டும் கட்டமைக்கலாம். காரின் தரைப்பகுதியில் நீளவாக்கில் மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலவை பொருட்களால் கட்டமைப்பு

கலவை பொருட்களால் கட்டமைப்பு

இந்த காரை அலுமினியம், பாலிகார்பனேட் கொண்ட கலவையில் தயாரிக்கப்பட்ட பேனல்கள் மூலமும் கட்டமைக்கலாம். இது வெறும் 750 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதில், வெறும் 14 கிலோ அளவுக்கு மட்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

இது சுற்றுச்சூழலுக்கு உகந்த காரும் கூட. இது எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்குகிறது. காரின் தரைப்பகுதிக்கு கீழே பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால், இடவசதியில் குறை இருக்காது.

சக்கரத்தில் மோட்டார்

சக்கரத்தில் மோட்டார்

சக்கரத்திலேயே எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதனை எஸ்யூவி கார்கள் போன்று 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் தேவைக்கு ஏற்ப இயக்க முடியும்.

கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள்

இதனை கன்வெர்ட்டிபிள் காராகவும் மாற்ற முடியும். இந்த காரில் வாட்டர் புரூப் கொண்ட நியோப்ரீன் கூரை உள்ளதால் விரும்பும்போது திறந்து மூட முடியும். இந்த கன்வெர்ட்டிபிள் காரின் மற்றொரு விசேஷம் என்ன தெரியுமா? இந்த காரின் முன்புற மற்றும் பின்புற வைன்ட்ஷீல்டு கண்ணாடிகளையும் மேலே, கீழே இறக்க முடியும் என்பதால், ஓர் முழுமையான கன்வெர்ட்டிபிள் காராக மாற்ற முடியும்.

 பிக்கப் டிரக்

பிக்கப் டிரக்

இந்த காரை பிக்கப் டிரக் போன்றும் மாற்றிக் கொள்ள முடியும். பின்புறம் இருக்கும் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூமை நீட்டிக் கொள்ள முடியும்.

 பின்புற இருக்கை

பின்புற இருக்கை

பின்புற இருக்கையையும் மடக்கிக் கொள்ள முடியும்.

சிட்டி கார்

சிட்டி கார்

நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு இரண்டாவது கார் வாங்க விரும்புவர்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Toyota Me.We concept is the latest name to join the growing list of cars designed by fashion designers. French designer Jean-Marie Massaud is the man behind the oriental sounding Me.We concept. As with almost all cars designed by fashion designers the Me.We also wears a unique design and attention grabbing de
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X