ரூ.8.08 லட்சத்தில் பவர்ஃபுல் டீசல் போலோ அறிமுகம்!

By Saravana

ரூ.8.08 லட்சத்தில் பவர்ஃபுல் டீசல் ஃபோக்ஸ்வேகன் போலோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமைக்கு சொந்தமாக்கியுள்ளது டீசல் போலோ.

இந்த காரில் வென்ட்டோவில் செயல்புரிந்து வரும் அதே 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. பவர்ஃபுல் ஹேட்ச்பேக் விரும்பிகளுக்கான காராக வந்திருக்கும் இந்த வேரியண்ட் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 105 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த பவர்ஃபுல் டீசல் கார் லிட்டருக்கு 19.7 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. ஆனால், வென்ட்டோ டீசல் எஞ்சின் லிட்டருக்கு 20.54 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

முகப்பு கிரில்லில் ஜிடி பேட்ஜ் மற்றும் பின்புறத்தில் டிடிஐ எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 15 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஹெட்லைட் கரும் பூச்சுடன் வந்துள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

டோர் சில் பிளேட்டுகளில் ஜிடி பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிலன் டைட்டான்ஸ்வார்ஸ் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி, லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், ஹேண்ட் பிரேக் ஆகியவரை குறிப்பிட்டு கூறலாம். அலுமினியம் பெடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகள்

வசதிகள்

1.6 லிட்டர் ஜிடி டிடிஐ காரில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், புளூடூத் மற்றும் யுஎஸ்பி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ட்வின் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், லேன் சேஞ்ச் இன்டிகேட்டர் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன. சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய 3 நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen has caught everyone by surprise with the soft launch of the Polo 1.6 GT TDI. While the launch was rumored, we were skeptical about it. But here it is. The new Polo is now the most power diesel hatchback in India. Essentially the same as Highline variant, the GT TDI trim gets the 1.6 liter TDI engine from VW Vento.
Story first published: Friday, September 13, 2013, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X