கோடையை குளுமையாக்கும் டாப்- 10 கார் ஆக்சஸெரீஸ்கள்: சிறப்பு தொகுப்பு

கோடை காலம் துவங்கிவிட்டநிலையில், கார் பயணங்கள் என்றாலே வெறுப்பு தட்டும். உச்ச நீதிமன்ற உத்தரவால் சன் ஃபிலிம் நீக்கப்பட்டுள்ளதால், ஏசி போட்டாலும், காருக்குள் வெயிலின் தாக்கம் சற்று இருக்கவே செய்கிறது.

மேலும், விடுமுறை காலமாக இருப்பதால், இப்போது வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வதும் தவிர்க்க முடியாதாக உள்ளது. எனவே, இந்த கோடை கால பயணங்களை குளுமையாக மாற்றுவதற்கான சில கார் ஆக்சஸெரீஸ்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

உங்கள் சுற்றுலா பட்ஜெட்டில் அடங்கி விடும் விலையிலும், அதேநேரத்தில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ஆக்சஸெரீஸ்களையும் பட்டியலிட்டுள்ளோம். ஸ்லைடரில் விபரங்கள காணலாம்.

 ஏசி கப் ஹோல்டர்

ஏசி கப் ஹோல்டர்

ஏசி வென்ட் கிரில்லில் பொருத்தும் வகையிலான இந்த ஏசி கப் ஹோல்டர் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். கூலர் அல்லது கூல்டு கிளவ் பாக்ஸ் இல்லாத நிலையில், இந்த கப் ஹோல்டரை ஏசி வென்ட் கிரில்லில் பொருத்தி தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டால் போதும். ஏசி.,யிலிருந்து வரும் குளிர்ந்த காற்றில் ஜில்லென்ற தண்ணீரை பெற முடியும். இது ரூ.200 விலையிலிருந்து கிடைக்கிறது.

 ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் எனப்படும் வசதி உயர் ரக கார் மாடல்கள் அல்லது காரின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், சாதாரண ஏசி பொருத்தப்பட்ட கார்களில் கூட இந்த ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சாதனத்தை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். கிரிஷ்டெக் என்ற நிறுவனம் இந்த கிளைமேட் கன்ட்ரோல் சாதனத்தை இ-பே ஆன்லைன் வணிக நிறுவனம் மூலம் விற்பனை செய்கிறது. விலை ரூ.4,000.

ஏசி ஃப்ரெஷ்னர்

ஏசி ஃப்ரெஷ்னர்

சில சமயம் வெளியில் அலைந்துவிட்டு வந்து காரில் அமரும்போது வியர்வை நாற்றம் அடிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், சாப்பிடும் பொருட்களால் காருக்குள் துர்நாற்றம் வரக்கூடும். இதனால் காரில் பயணிக்கும் பிறருக்கும் சங்கடமாக இருக்கும். இதற்கு ஏர் ஃப்ரெஷ்னர் ஒன்றை வாங்கி காருக்குள் வைத்துவிடுங்கள்.

டேஷ்போர்டு கவர்

டேஷ்போர்டு கவர்

வெயிலில் காரை நிறுத்துவதை கூடுமான வரை தவிர்ப்பது நலம். ஆனால், வெளியில் செல்லும்போது வெயிலில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். சிலர் வீட்டிலேயே நிழலில் நிறுத்தும் வாய்ப்பு இருக்காது. அதுபோன்றவர்கள் டேஷ்போர்டு கவர் ஒன்றை வாங்கி போட்டுவிடுங்கள். இதனால், டேஷ்போர்டு பிளாஸ்டிக்குகளின் நிறம் வெயிலால் மங்காது. தெறிப்புகளும் ஏற்படாது.

சன் ஷேடு

சன் ஷேடு

சன் ஃபிலிமுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், இந்த சன் ஷேடுகளை வாங்கி பொருத்திக் கொள்வது நல்லது. குறைவான விலையிலேயே சன் ஷேடுகள் இப்போது கிடைக்கின்றன.

கூலர்

கூலர்

வெளியூர் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்வோரக்கு மிக அவசியமான ஒன்றுதான் இந்த கூலர் எனப்படும் சிறிய குளிர்சாதனப் பெட்டி. இது பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. 8 லிட்டர் கொண்ட கூலரை 12V சாக்கெட் மூலம் மின் இணைப்பு கொடுத்து விடலாம். டிராப்பிகூல் என்ற பிராண்டு மார்க்கெட்டில் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இது ரூ.4,500 முதல் கிடைக்கின்றன. கார் ஃப்ரீஸர்கள் கூட கிடைக்கின்றன. ஆனால், அவை விலை அதிகம் என்பதுடன் அதிக மின்சாரம் தேவைப்படும்.

கார் கவர்

கார் கவர்

காரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு மட்டுமின்றி, வெயில் மற்றும் மழையிலிருந்து காரை பாதுகாப்பதில் கார் கவர் மிக முக்கியமானது. இது காரின் உட்புறங்களில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க உதவும்.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

முன்பு சொகுசு கார்களில் மட்டுமே கிடைத்த இதுபோன்ற சன் ஸ்கிரீன்கள் தற்போது சில சாதாரண கார்களிலும் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை மோட்டார் மூலமும், சில சன் ஸ்கிரீன்களை கைகளால் இழுத்து மூடும் வகையில் இருக்கின்றன. இது காரில் செல்லும் பயணிகளுக்கு வெயிலின் தாக்கத்தை குறைப்பதோடு, பாதுகாப்பையும் வழங்குகிறது. அம்ரிதாஸ் என்ற பிராண்டின் கார் கண்ணாடி கதவுக்கான சன் ஸ்கிரீன் நம்பகமானது. காரின் அனைத்து கண்ணாடி கதவுகள் மற்றும் ரியர் வைண்ட்ஷீல்டுக்கு சேர்த்து ரூ.4,000 விலையில் கிடைக்கின்றன.

சீட் கவர்

சீட் கவர்

கோடைகாலங்களில் லெதர் இருக்கைகள் மிகுந்த அசகவுரியத்தை தரும். குறிப்பாக, அடர்ந்த நிற லெதர் இருக்கைகள் கோடை காலங்களில் சாதாரண இருக்கைகளை விட அதிக வெப்பத்தை உணர வைக்கும். சில சமயம் அமர்ந்து செல்லும்போது எரிச்சலையும் உண்டாக்கும். இதனை தவிர்த்துக் கொள்வதற்கு சீட் கவர்களை வாங்கி போட்டுவிடுங்கள். இது லெதர் இருக்கைகளையும் பாதுகாக்கும்.

சன் கிளாஸ் ஹோல்டர்

சன் கிளாஸ் ஹோல்டர்

வெயில் காலங்களில் வெயிலின் தாக்கத்தை குறைத்து கண்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்வதில் சன் கிளாஸ்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், இந்த சன் கிளாஸை காரில் எடுத்துச் சென்று பத்திரமாக எடுத்து வருவதே பெரிய வேலையாகிவிடும். இதற்கென சன் கிளாஸ் ஹோல்டர்கள் மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. காருக்குள் சன் வைசரில் பொருத்திக் கொள்ளலாம். இதற்காக சன் கிளாஸ் ஹோல்டரில் ஒரு கிளிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.350 விலையில் கிடைக்கிறது.

 மறந்துவிடாதீர்

மறந்துவிடாதீர்

கோடை பயணத்தை குளுமையாக்குவதற்கு ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆக்சஸெரீஸ்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இதபோன்று, தங்களிடம் கூடுதல் தகவல்கள் இருந்தால், கருத்துப் பெட்டியில் பதிவு செய்யுங்கள். பிற வாசகர்களுக்கும், கார் உரிமையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இன்றைய ஃபேஸ்புக் வீடியோ: காணத்தவறாதீர்!

Most Read Articles
English summary
Your car can get adversely affected by the heat too, so it's important to prepare it for the summer. There are now a whole lot of accessories available for your car that can help provide some relief from the heat. Stay cool with this list of summer extras for your four wheels.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X