கார் கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்யும் முன்பு நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து செயல்பாடுகள்..!!

Written By:

காரில் பயணம் செய்யும்போது ஆபத்து நேர்ந்தால் பாதுகாப்பு என்பது ஏர் பேகுகள், உராய்வு கட்டுபாட்டு கருவி, தானாக இயங்கக்கூடிய பிரேக் அமைப்பு ஆகியவற்றில் மட்டுமல்ல, நாம் நமது காரை ஓட்டும் விதத்திலும் பாதுகாப்பு உள்ளது.

கியர், கிளட்ச், ஸ்டீயரிங் ஆகியவற்றை இயக்குவதற்கு முன்பு, காரில் எரிவாயு போதிய அளவு உள்ளதா என்பது பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று தான் அந்த நாளுக்கான கார் கண்ணாடிகளின் செயல்பாடுகளும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் ரியர் வியூ கண்ணாடிகள்; ஏர் பேகுகள் மற்றும் உராய்வு கட்டுபாட்டு கருவிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை பெறுவதாக ஆட்டோமொபைல் உலகம் கூறுகிறது.

பாதுகாப்பு மற்றும் ஆபத்தை தடுப்பதற்கு ஒரு கார் ஓட்டுநர் ரியர் வியூ கண்ணாடிகளை சரியாக கையாளவேண்டும் என்று கூறுகிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள்.

ரியர் வியூ கண்ணாடிகளை பயன்படுத்தாமல் கார் ஓட்டுவது மிக தவறான டிரைவிங் முறை என்பதும் இவர்களது கருத்தாக உள்ளது.

ரியர் வியூ கண்ணாடிகளை காரில் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அதில் உள்ள பயன்கள் என்ன? என்பதை கீழே விரிவாக பார்ககலாம்...

1. கண்ணாடிகளை புரிந்துக்கொள்ளுங்கள்

"உருவங்களின் அருகாமை கண்ணாடியில் பார்ப்பதை விட நேரில் இன்னும் நெருங்கி இருக்கும்" என்பது நம் கார்களில் இருக்கும் அனைத்து ரியர் வியூ கண்ணாடிகளிலும் இருக்கும் ஒரு வாக்கியம். 

இதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு முறையும் நாம் கார் எடுக்கும் போது, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அனைத்து கண்ணாடிகளிலும் தெரியக்கூடிய சுற்றுப்புறத்தை தினசரி சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. 

இதனால் உங்கள் கார் கண்ணாடிகள் அன்று எப்படி பிரதிபலிக்கின்றன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு இந்த பழக்கம் தவறு நேரும் போது அதை சரிசெய்துக்கொள்ள வழிவகுக்கும்.

2. நடுவில் இருக்கும் ரியர் வியூ கண்ணாடி

கார்களில் மத்திய பகுதியில் உள்ள ரியர் வியூ கண்ணாடியை சரிப்படுத்துவதில் பெரிய நுணுக்கம் உள்ளது. இதில் காரில் பயணம் செய்வோரின் பாதுகாப்பும் உள்ளது. 

காரின் பின்புற வின்ட்ஸ்கீரின் முழுவதுமாக தெரியும் வகையில் மத்திய ரியர் வியூ கண்ணாடியை நாம் அமைக்க வேண்டும்.

இதன் மூலம் காருக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை ஓட்டுநர் தனது தலையை திருப்பாமலே, கண்ணாடி வழியாக எளிதாக பார்க்கலாம்.

3. சரி செய்தல்

இதை உடனே படித்திவிட்டு உங்களது காரின் அனைத்து கண்ணாடிகளிலும் போய் கைகளை வைத்து அழுத்தி, விரல் தடங்களை உருவாக்கி விடாதீர்கள். இது ஒரு தவறான அணுகுமுறை. 

ஒரு கார் ஓட்டுநர் இப்படிசெய்யக்கூடாது. இவ்வாறு கண்ணாடிகளை நீங்கள் இயக்க பழகிக்கொண்டால், அவசர தருணங்களில் காரை ஓட்டும்போது அதனால் கவனம் சிதறி சாலையில் சிரமம் ஏற்பட்டு விடும்.

4. வெளிப்புற ரியர் வியூ கண்ணாடி

ஒட்டுமொத்த காரின் வெளிப்புறத்தையே காட்டக்கூடியவை தான் வெளிப்புற ரியர் வியூ கண்ணாடியின் பயன்பாடு.

இதை சரிசெய்ய, நீங்கள் நேராக அமர்ந்துக்கொண்டு, கண்ணாடியின் பின்புறத்தை பிடித்துக்கொண்டு, காரின் இரு வெளிப்புறங்களும் சரியாக தெரியும் படி அமைக்க வேண்டும். 

மேலும் சாலையில் கார் இயக்கத்தில் இருக்கும் போது, பெரும்பாலும் விபத்து நடந்தால் அதில் பாதிக்கப்படுவது வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகளாத்தான் இருக்கும்.

அதனால் எப்போதும் உங்கள் கார் வெளிப்புற கண்ணாடிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டாலும், அதை உடனே மாற்றி அமைக்கும் மனோவலிமை உங்களுக்கு வேண்டும்.

5. பிளைன்ட் ஸ்பாட் கண்ணாடிகள்

கார்களில் பக்க பின்புறங்களை காண ’பிளைன்ட் ஸ்பாட்’ கண்ணாடிகளை பயன்படுத்தலாம். இவை குவி (கான்கேவ்) லென்ஸ் அமைப்பில் உருவாக்கப்படுபவை.

இதுபோன்ற கண்ணாடிகளை நாம் பார்க்கும் போது மீன்களின் பார்வை திறனை (Fish Eye Lens) வழங்கும். இதனால் காரின் பின்னால் நாம் பார்க்க முடியாத வெளிபுறத்தைக்கூட பிளைன் ட்ஸ்பாட் கண்ணாடி வழியாக ஓட்டுநரால் பார்க்க முடியும். 

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செயல் முறைகளும் பாதுகாப்பான பயணத்திற்கான துணுக்குகளே. கண்ணாடிதானே என்று அலட்சியம் வேண்டாம். தொழில்நுட்பங்கள் பல வந்தாலும், நாம் பாதுகாப்பு என்ற எச்சரிக்கையுடன் கார் ஓட்டுவது மிக அவசியம்.

Story first published: Tuesday, June 13, 2017, 8:30 [IST]
English summary
5 things you need to know before adjusting your rear-view mirrors. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos