புதிய கார்தான் வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!

புதிய கார் வாங்குவதில் இருக்கும் அனுகூலங்கள் பற்றிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பு விவரிக்கிறது.

Written By:

பட்ஜெட், அதிக இருக்கை வசதி கொண்ட கார்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்காக சிலர் பழைய கார்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகினறனர். ஆனால், பழைய கார் வாங்கிய பின்னர் பலர் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள், கார் வாங்கிய சந்தோஷத்தையே கெடுத்து விடும்.

இந்த நிலையில், பழைய காரைவிட புதிய கார் வாங்குவதே சாலச் சிறந்தது என்பதற்கான சில முக்கிய காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வரலாறு

பழைய கார்களை வாங்கும்போது, அந்த கார் விபத்தில் சிக்கியதா, பழுதுகள் இருக்கிறதா என்பது உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கல்கள் புதிய காரில் இல்லை. ஆலையிலிருந்து நேரடியாக வருவதால் எந்த பிரச்னையும் இல்லை.

ஆவணங்கள்

பழைய கார்களின் ஆவணங்களில் பல மோசடிகள் நடக்கின்றன. புதிய காரை வாங்கும்போது இதுபோன்று ஆவணங்களில் மோசடி நடப்பதற்கு வாய்ப்பில்லை.

நிம்மதியான பயணம்

பழைய காரில் நீண்ட தூர பயணம் செல்லும்போது வழியில் பழுதாகிவிடுமோ என்ற ஒரு வித அச்ச உணர்வு எழும். ஆனால், புதிய காரில் பயணிக்கும்போது இதுபோன்ற அச்ச உணர்வு இருக்காது. நிம்மதியான பயண அனுபவத்தை பெற முடியும்.

மன நிறைவு

புதிய கார் வாங்கும்போது மனதில் கூடுதல் சந்தோஷமும், பெருமையும் சேர்ந்து மன நிறைவை தரும். வேறு யாரும் பயன்படுத்திய காரை வாங்கும்போது இது என்னுடைய கார் என்ற உள் உணர்வு இருக்காது. பழைய கார் வாங்கும்போது இதுபோன்ற முழுமையான சந்தோஷத்தை பெற முடியாது. உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் உங்களுக்கான மதிப்பு உயரும்.

வாரண்டி

புதிய கார்களுக்கு முதல் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டி கிடைக்கும். உதிரிபாகங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் கூட மாற்றித் தருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், பெரும்பாலான பழைய கார்களில் இந்த வாய்ப்பு இருக்காது.

பராமரிப்பு செலவு

புதிய கார் வாங்கும்போது முதல் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். பழுது பிரச்னையும் இருக்காது. ஆனால், பழைய கார் வாங்கும்போது பழுது பிரச்னையும், பராமரிப்பு செலவும் சற்று கூடுதலாக இருக்கும்.

மைலேஜ்

புதிய கார்கள் சிறப்பான மைலேஜை வழங்கும். அதேநேரத்தில் உதிரிபாகங்கள், டயர் தேய்மானம், எஞ்சின் பாகங்கள் தேய்மானம் உள்ளிட்டவற்றால் பழைய கார்களில் மைலேஜ் சற்று குறைவாகவே இருக்கும்.

வசதிகள்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கார்களுக்கும், இப்போது வரும் புதிய கார்களில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளுக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. இப்போது வரும் புதிய கார்களில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புளூடூத் தொடர்பு வசதி, நேவிகேஷன் வசதி என இந்த பட்டியல் நீள்கிறது.

பாதுகாப்பு

பழைய கார்களைவிட இப்போது வரும் கார்களில் பாதுகாப்பு வசதிகள் பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் இபபோது பல கார்களில் நிரந்தரமாக இடம்பெற்று இருக்கின்றன. போக்குவரத்து பெருகிவிட்ட இச்சூழலில் இந்த பாதுகாப்பு வசதிகள் மிக முக்கியமானவை.

சேமிப்புச் சலுகைகள்

புதிய கார்களை வாங்கும்போது சிறப்பு தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது. டிசம்பர் மாத தள்ளுபடி, அடுத்து புத்தாண்டு ஆஃபர் என புதிய கார் வாங்குவோர் சேமிப்பை பெறும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், பழைய காரில் இந்த தள்ளுபடி என்ற பேச்சே இருக்காது.

வட்டி விகிதம்

பழைய காரை கடனில் வாங்கும்போது வட்டி விகிதம் மிக அதிகம். அதேநேரத்தில், பழைய காருடன் ஒப்பிடும்போது புதிய காருக்கான வட்டி விகிதம் மிக குறைவாக இருக்கிறது.

சிறிய வித்தியாசம்

மற்றொரு விஷயம், பழைய காருக்கும், புதிய காருக்கும் இடையிலான முன்பணம் மிக குறைந்த வித்தியாசத்திலேயே அமைகிறது. புதிய காருக்கு ஒரு லட்ச ரூபாய் கட்டுகிறீர்கள் என்றால், பழைய காருக்கு ரூ.80,000 வரை கட்ட வேண்டியிருக்கும். அதேபோன்றுதான், மாதத் தவணையும் சில ஆயிரங்கள் வித்தியாசத்தில் இருக்கும்.

மாதத் தவணை

உதாரணத்திற்கு, புதிய மாருதி வேகன் ஆர் காருக்கான மாதத்தவணை ரூ.8,500 என்று இருக்கும்பட்சத்தில், 3 ஆண்டுகள் ஓடிய மாருதி வேகன் ஆர் காருக்கான மாதத் தவணை ரூ.7,000 என்ற அளவில் இருக்கும். அதேநேரத்தில், புதிய காருக்கு மாதத் தவணை காலம் இரண்டு ஆண்டுகள் வரை கூடும். இதனை சமாளிக்க முடியும் என்றால் புதிய கார் வாங்குவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஆயுள்

உதாரணத்திற்கு 5 ஆண்டுகள் பழமையான காரை வாங்கும்போது, அந்த கார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பான நிலையில் இயங்கும் வாய்ப்புண்டு. அதுவும் போதிய பராமரிப்பில் வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும், அந்த கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டால், அந்த கார்களுக்கான மதிப்பு தடாலடியாக குறைந்து போகிறது. உதிரிபாகங்கள் பிரச்னையும் எழும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Buying a new car comes with a whole lot of advantages, here are the reasons to opt for a brand new car compared to a used car.
Please Wait while comments are loading...

Latest Photos