2015 முதல் பாரத் ஸ்டேஜ்-5 மாசு விதி அமல்: முக்கிய அம்சங்கள் விபரம்

வரும் 2015ம் ஆண்டு முதல் பாரத் ஸ்டேஜ்-5 மாசுக் கட்டுப்பாட்டு விதி அமலுக்கு வர இருக்கிறது. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை அதிகரிக்கும். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை குறைக்கும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை உள்பட நாட்டின் முதலாம் நிலை நகரங்களில் பாரத் ஸ்டேஜ்-4 விதியும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பாரத் ஸ்டேஜ்-3 விதியும் அமலில் இருக்கின்றன. இந்த நிலையில், தாறுமாறாக உயர்ந்து வரும் வாகன எண்ணிக்கையால் சுற்றுச் சூழலுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அதிக வாகன புழக்கம் மாநகரங்களில் பாரத் ஸ்டேஜ் -5 விதியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர இருக்கிறது. இதற்கு தக்கவாறு கார்பன் புகை வெளியீட்டு அளவு குறித்த நிபந்தனைகள் தற்போது கார் நிறுவனங்களுக்கு அனுப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

எஞ்சினில் மாற்றம்

எஞ்சினில் மாற்றம்

பாரத் ஸ்டேஜ்- 5 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ற வகையில் குறைந்த கார்பனை வெளியிடும் வகையில் கார் எஞ்சினில் சில மாறுதல்களை தயாரிப்பாளர்கள் செய்ய வேண்டும்.

எரிபொருள் தரம்

எரிபொருள் தரம்

பெட்ரோல் மற்றும் டீசலின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். எரிபொருளில் 10 பிபிஎம் அளவுக்குள் சல்ஃபர் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவியாதலால் காற்று மாசு

ஆவியாதலால் காற்று மாசு

வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் புகை போன்றே, வாகன தொட்டியிலிருந்து ஆவியாகும் பெட்ரோல், டீசலாலும் அதிக அளவில் காற்று மாசுபடுவதாக தெரியவந்துள்ளது.

ஆவியாதலை தடுக்கும் கட்டமைப்பு

ஆவியாதலை தடுக்கும் கட்டமைப்பு

பாரத் ஸ்டேஜ்-5 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளில் மிக முக்கிய அம்சமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆவியாதலை தடுப்பதற்கான விசேஷ தடுப்புகளுடன் கட்டமைக்க வேண்டும் என்பதும் இருக்கும். தற்போது இருந்தாலும், இன்னும் சிறப்பான கட்டமைப்பு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கிலும் பொருத்த வேண்டும்

பைக்கிலும் பொருத்த வேண்டும்

பார்க்கிங் செய்யப்படும்போது பைக் மற்றும் ஸ்கூட்டர்களிலிருந்து பெட்ரோல் ஆவியாதலை தடுக்க சிறப்பு கன்ட்ரோல் யூனிட் கண்டிப்பாக பொருத்த வகை செய்யப்பட்டுள்ளது.

மைலேஜ் லேபிள்

மைலேஜ் லேபிள்

புதிய விதி அமலுக்கு வரும்போது மைலேஜ் லேபிளுடன் கார்களை விற்பனை செய்வதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் தரும் கார்களின் விபரங்களை எளிதாக ஒப்பிட்டு பார்த்து வாங்க முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

கிராஷ் டெஸ்ட் எனப்படும் கார்களின் கட்டுமானம் குறித்த தர சோதனை விதிகளை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கட்டுமானம் கொண்டதாக கார்கள் வரும். ஒருவேளை விபத்து ஏற்பட்டால்கூட பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த கட்டமைப்பு இருக்கும்.

எரிபொருள் கசிவு தடுப்பு

எரிபொருள் கசிவு தடுப்பு

விபத்தின்போது எரிபொருள் கசிவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வகையில் இந்த கட்டுமானம் இருக்கும்.

 கதவுகள் திறக்கும் வசதி

கதவுகள் திறக்கும் வசதி

விபத்தின்போது கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதியையும் காரில் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சைல்டு சீட்

சைல்டு சீட்

குழந்தைகளுக்கான சைல்டு சீட் பொருத்துவதற்கான வசதி இருப்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

 விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதி அமலுக்கு வரும்போது கார் எஞ்சின் மற்றும் கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டியிருப்பதால் கார் விலை 1.5 முதல் 2.5 சதவீதம் வரையிலும், பைக்குகளின் விலை 2 சதவீதம் வரையிலும் அதிகரிக்கும். இதுதவிர, எரிபொருளின் தரம் அதிகரிக்கப்படுவதால் அதிலும் விலேயேற்றம் இருக்கும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X