கார்களின் உடற்கூறு வகைகள் பற்றிய சிறப்பு தகவல்கள்!

By Saravana

கார்களில் ஏராளமான உடற்கூறு வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும், தனது வசதி மற்றும் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்றவாறு கார் மாடல்களை தயாரிக்கின்றன. ஆனால், அனைத்து நிறுவனங்களின் கார்களும் குறிப்பிட்ட உடற்கூறு வகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

காரின் புறத்தோற்றத்தை வைத்தே அது எந்த ரகத்தை சேர்ந்தது என்பதை எளிதாக கூறிவிட முடியும். இந்தியாவில் அதிகம் காணப்படும் கார்களின் உடற்கூறு வகைகள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம். புதிய வாசகர்களுக்காக மீண்டும் இந்த செய்தித் தொகுப்பை வெளியிடுகிறோம்.

கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள்

கூரையை திறந்து மூடும் வசதி கொண்ட கார்கள் கன்வெர்ட்டிபிள் மாடல் என்று கூறப்படுகிறது.. பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார் நிறுவனங்கள் கன்வெர்ட்டிபிள் கார் மாடல்களை தயாரிக்கின்றன. பிஎம்டபிள்யூ எம்-3, எம்-6 ஆகிய கார்கள் இந்த கன்வெர்டிபிள் ரகத்தை சேர்ந்தவை.

 கூபே

கூபே

பக்கவாட்டில் இரண்டு கதவுகளை மட்டும் கொண்ட முழுவதும் மூடப்பட்ட வடிவமைப்பை கொண்ட கார் கூபே மாடல் என்றழைக்கப்படுகிறது. பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் கார்கள் கூபே வடிவமைப்பை கொண்டவை. இரண்டு கதவுகளை கொணடிருந்தாலும், சில கார்களில் நான்கு இருக்கைகள் இருக்கும். ஆடி நிறுவனத்தின் ஆர்எஸ்-5 கார் கூபே வடிவமைப்பை கொண்டது.

ஹேட்ச்பேக்

ஹேட்ச்பேக்

பக்கவாட்டில் நான்கு கதவுகளும், பின்புறம் ஒரு கதவும் கொண்ட கார் ஹேட்ச்பேக் கார் என்று கூறப்படுகிறது. நமது பாஷையில் இவற்றை சின்ன கார் என்று அழைக்கிறோம். மாருதி ஆல்ட்டோ, ரிட்ஸ், செவர்லே ஸ்பார்க், பீட், டொயோட்டோ லிவா உள்ளிட்ட கார்கள் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது.

பயணிகள் வேன்

பயணிகள் வேன்

அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் பயணிகள் வாகனங்கள் வேன் என்று கூறுகிறோம். டாடா விங்கர், மஹிந்திரா மேக்ஸிகேப் ஆகியவை இந்த ரகத்தை சேர்ந்தது.

செடான் கார்

செடான் கார்

பின்பக்கம் பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக 'டிக்கி'யுடன் வரும் கார்கள் செடான் கார்கள் என்று அழைக்கிறோம். கூபே காரும், செடான் காரும் தூரத்திலிருந்து பார்த்தால் ஒரே மாதிரியான வடிவமைப்பை பெற்றிருக்கும். ஆனால், கூபே கார் பக்கவாட்டில் இரண்டு கதவுகளையும், செடான் கார் பக்கவாட்டில் நான்கு கதவுகளையும் கொண்டிருக்கும். மாருதி எஸ்எக்ஸ்-4, ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆகியவை இந்த ரகத்தை சேர்ந்தவை.

ஸ்டேஷன் வேகன்

ஸ்டேஷன் வேகன்

ஹேட்ச்பேக் காரில் அதிக இடவசதியுடனும், அதிக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் கார்கள் ஸ்டேஷன் வேகன் மாடல் என்று கூறப்படுகிறது. டாடா மரினா இந்த ரகத்தை சேர்ந்ததே.

எஸ்யூவீ

எஸ்யூவீ

ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள் (எஸ்யூவி) என்று அழைக்கப்படும் இந்த கார்கள் ஆப்-ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாகவும், கரடு முரடான சாலைகள் கொண்ட பகுதியில் பயன்படுத்தும் வகையிலும் இருக்கும். 4 வீல் டிரைவ் கொண்டதாகவும், பிற கார்களை இழுத்து வரும் திறன் கொண்டதாகவும், வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும். டொயோட்டோ பார்ச்சூனர், ஃபோர்டு என்டவர் கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை.

எம்பிவி

எம்பிவி

மல்டி பர்ப்போஸ் வெகிக்கிள்(எம்பிவி) என்று அழைக்கப்படும் கார்கள் பல்வகை பயன்பாட்டு வாகனங்களாக இருக்கின்றன. இதன் இருக்கைகளை வேண்டும்போது கழற்றி பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தலாம். மாருதி ஆம்னி எம்பிவி ரகத்தை சேர்ந்ததாகும்.

பிக்கப் டிரக்

பிக்கப் டிரக்

கார் போன்ற முகப்பு மற்றும் கேபினில் இருக்கை வசதியும், பின்பக்கம் சரக்குகளை ஏற்றும் வகையில் கேரியர் கொண்டதாக வடிவமைக்கப்படும் வாகனங்கள் பிக்கப் டிரக் என்று கூறப்படுகிறது. மஹி்ந்திரா ஜீனியோ இந்த ரகத்தை சேர்ந்தது. இதில், ஒரு வரிசை இருக்கை மற்றும் இரண்டு வரிசை இருக்கை கொண்ட கேபின்களுடனும் வடிவமைக்கப்படுகின்றன.

லிமோசின்

லிமோசின்

பல்வேறு நாடுகளில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் திருமண விழாக்களில் நீளமான வடிவம் கொண்ட கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை லிமோ அல்லது லிமோசின் என்று அழைக்கிறார்கள்.

Most Read Articles
English summary
car model is a particular brand of vehicle sold under a unique segment by a manufacturer, usually within a range of models, usually of different sizes or capabilities.In auto sector commonly called or defined the car models of particular name based on its design. For example, the same model can be offered as a five door hatchback, four door sedan and other models. But vary the exterior,interiors and other technical aspects.For example, Maruti SX-4 and Hyundai verna are including in the Sedan segment. Here are given some car model specifications.
Story first published: Wednesday, September 18, 2013, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X