கார் டேஷ்போர்டு எச்சரிக்கை விளக்குகள் பற்றிய தகவல்கள்

கார் டேஷ்போர்டு எச்சரிக்கை விளக்குகள் மற்றும் இதர எச்சரிக்கை குறியீடுகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கார்களில் புதிய தொழில்நுட்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு தக்கவாறு டிரைவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதத்தில் பல்வேறு குறியீடுகளுடன் சிறிய வடிவிலான விளக்குகள் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளன.

கார் டேஷ்போர்டு எச்சரிக்கை விளக்குகள், குறியீடுகள்

கார் வாங்கும் பலருக்கு சில எச்சரிக்கை குறியீடுகள் தெரிந்தாலும், அதில் முழுமையாக பலவற்றை தெரிந்து கொள்ள நீண்ட நாட்களாகும். சில சமயம் எச்சரிக்கை குறியீடு குறித்து தெரியாமல் அலட்சியம் செய்யும்போது, அது பின்னர் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இதுபோன்ற டேஷ்போர்டு எச்சரிக்கை விளக்குகள் மற்றும் இதர எச்சரிக்கை குறியீடுகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏபிஎஸ் விளக்கு

ஏபிஎஸ் விளக்கு

ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏதெனும் பிரச்னைகள் இருந்தால் இது போன்று குறியீட்டுடன் எச்சரிக்கை விளக்குகள் எரியும். எச்சரிக்கை விளக்குகள் ஒளிர்ந்தபோதும் சாதாரண பிரேக் அமைப்பு சரியாக வேலை செய்யும். ஏபிஎஸ் பிரேக் மட்டும் இயங்கவில்லை என்பது அர்த்தம்.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

இதுபோன்று விளக்கு ஒளிரும்போது பேட்டரி சார்ஜ் ஆகவில்லை என்று அர்த்தம்.

பனி விளக்கு

பனி விளக்கு

பனி விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

சைல்டு லாக்

சைல்டு லாக்

சைல்டு லாக்கில் பின்புற கதவு மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

க்ரூஸ் கன்ட்ரோல்

க்ரூஸ் கன்ட்ரோல்

நெடுஞ்சாலையில் ஒரே வேகத்தில் செல்ல பயன்படும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி இயங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறது.

Recommended Video

Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark
எஞ்சின் க்ளோ ப்ளக்

எஞ்சின் க்ளோ ப்ளக்

குளிர்ச்சியான சமயங்களில் டீசல் கார் எஞ்சினை சூடாக்குவதற்கு பயன்படும் எஞ்சின் க்ளோ ப்ளக் ஆன் செய்யப்பட்டிருப்பதை காட்டுகிறது. இந்த விளக்கு அணையும் வரை எஞ்சினை ஸ்டார்ட் செய்யக் கூடாது.

எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்

எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்

பவர் ஸ்டீயரிங்கில் பிரச்னை இருப்பதை உணர்த்துகிறது.

எஞ்சின் ஆயில்

எஞ்சின் ஆயில்

எஞ்சினில் ஆயில் குறைவாக இருப்பதை காட்டுகிறது. இந்த விளக்கு எரிந்தால் உடனடியாக ஆயில் லெவலை பார்த்து டாப் அப் செய்வது அவசியம். இல்லையெனில் கார் எஞ்சினில் பெரிய பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

எஞ்சின் சூடு

எஞ்சின் சூடு

எஞ்சின் அதிக சூடாவதை காட்டும் எச்சரிக்கை விளக்கு. உடனடியாக அருகிலுள்ள சர்வீஸ் மையத்தில் பரிசோதனை செய்வது அவசியம்.

எஞ்சின் பிர்சனை

எஞ்சின் பிர்சனை

எஞ்சின் மேலாண்மையில் இருக்கும் பிரச்னையை தெரிவிக்கிறது. ஒருவேளை, கார்பன் புகை மற்றும் இதர பிரச்னைகள் ஏற்படும்போது இவ்வாறு எரியும். உடனடியாக, அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கிடம் காரை பரிசோதனை செய்ய வேண்டும்.

ஹஸார்டு லைட்

ஹஸார்டு லைட்

பஞ்சர் அல்லது காரில் பிரச்னை ஏற்பட்டு சாலையில் நிறுத்த வேண்டிய அவசியம் வரும்போது பிற வாகன ஓட்டிகளுக்கு கார் நிற்பதை எச்சரிக்கும் பொருட்டு, இரு இண்டிகேட்டர் விளக்குகளையும் சேர்த்து ஒளிர விடும் ஹசார்டு சுவிட்சை ஆன் செய்யும்போது இதுபோன்ற விளக்கு எரியும்.

ஹை பீம்

ஹை பீம்

ஹெட்லைட்டில் ஹை பீம் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை டிரைவருக்கு எச்சரிக்கை தருகிறது.

எரிபொருள் குறைவு

எரிபொருள் குறைவு

எரிபொருள் குறைவாக இருப்பதை காட்டும் எச்சரிக்கை விளக்கு.

 கார் கதவுகள்

கார் கதவுகள்

காரில் இருக்கும் கதவுகள் சரியாக மூடப்படவில்லையென்பதை எச்சரிக்கும் விளக்குதான் இது.

 பார்க்கிங் பிரேக்

பார்க்கிங் பிரேக்

ஹேண்ட் பிரேக் போடப்பட்டிருப்பதை காட்டும் குறியீட்டு விளக்கு. ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்த பின்பும் இதுபோன்று விளக்கு எரிந்தால் பிரேக் சிஸ்டத்தில் ஆயில் கசிவு அல்லது இதர பிரச்னை உள்ளதாக அர்த்தம்.

ஏர்பேக் லாக்

ஏர்பேக் லாக்

ஒருவேளை குழந்தைகள் முன்பக்க இருக்கையில் அமரும்போது ஏர்பேக்கை அணைத்து விடுவது நல்லது. அவ்வாறு அணைத்து வைக்கப்பட்டிருப்பதை காட்டும் எச்சரிக்கை குறியீடு.

பின்புற பனி விளக்கு

பின்புற பனி விளக்கு

பின்புற பனி விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை காட்டும் குறியீட்டு விளக்கு.

 டிஃபாகர்

டிஃபாகர்

டிஃபாகர் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்த்தும் சமிக்ஞை விளக்கு. ஒருவேளை, டிஃபாகர் தொடர்ந்து இயங்கினால் பேட்டரி சார்ஜ் எளிதில் கரையும் என்பதால், இந்த விளக்கும் மிக முக்கியமானதே.

சீட் பெல்ட்

சீட் பெல்ட்

சீட் பெல்ட் போடவில்லை என்பதை காட்டும் குறியீட்டு விளக்கும். சில கார்களில் பீப் ஒலி எழுப்பும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

டர்ன் இண்டிகேட்டர்

டர்ன் இண்டிகேட்டர்

கார் எந்த பக்கம் திரும்புகிறது என்பதை உணர்த்துவதற்கான டர்ன் இண்டிகேட்டர்.

டயர் பிரஷர்

டயர் பிரஷர்

டயரில் காற்றழுத்தம் குறைவாக இருப்பதை காட்டும் எச்சரிக்கை விளக்கு. வாடிக்கையாளர் கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சரியான அளவை இந்த கருவியில் பதிவு செய்துவிட்டால், டயரில் அழுத்தம் குறைவதை காட்டிவிடும்.

Most Read Articles
English summary
Car Dashboard Lights and other Warning Lights details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X