கார் எஞ்சின் பிரச்னைகளும், அதற்கான சில எளிய தீர்வுகளும்...!!

Written By:

காருக்கு இதயம் போன்றது எஞ்சின். தற்போது வரும் கார் எஞ்சின்கள் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன. ஆனால், பிரச்னைகள் என்று வந்தாலும் பெரும் தலைவலியையும், பொருட்செலவையும் இழுத்து விட்டுவிடும். இப்போது வரும் புதிய கார் மாடல்கள் முற்றிலும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அமைப்பில் இயங்குகின்றன.

எனவே, எஞ்சினில் ஏற்படும் பிரச்னைகளை ஒபிடி-1 போர் சாதனம் கண்டறிந்து உடனுக்குடன் எச்சரித்துவிடுவதுடன், அதனை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள விளக்குகளை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். அதேநேரத்தில், சில வேளைகளில் உங்களால் கண்டறிய முடியாத பிரச்னைகள் குறித்தும்,அதற்கான சில எளிய தீர்வுகள் குறித்தும் இங்கே காணலாம்.

எஞ்சின் சூடு

எஞ்சின் அதிக சூடாவது தெரிந்தால், சாலையோரத்தில் காரை பாதுகாப்பாக நிறுத்திவிடுங்கள். பின்னர், பானட்டை திறந்து எஞ்சின் மற்றும் அதை சுற்றியுள்ள பாகங்களில் கையை வைத்து தொடாமல், கூலண்ட் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும். கூலண்ட் அளவு குறைவாக கண்ணுக்கு தெரிந்தால், 15 நிமிடங்கள் சூடு குறையும் வரை விட்டுவிட்டு, அதன் பிறகு டிப் ஸ்டிக்கை கூலண்ட் தொட்டியில் விட்டு அளவை சரி பார்க்கவும்.

தற்காலிக உபாயம்

சூடு குறைந்த பின்னரே இதனை செய்யவும். இல்லையெனில், நீராவி வெளியேறி பெரிய காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. கூலண்ட் குறைவாக இருந்து, உடனடியாக வாங்க முடியாத சூழலில் நீங்கள் இருந்தால், கூலண்ட்டுக்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும்.

உடனடியாக...

நேராக அருகில் உள்ள சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்று முழுமையாக கூலண்ட் தொட்டியை சுத்தம் செய்து புதிய கூலண்ட்டை உடனடியாக நிரப்பவும். அதேநேரத்தில், கூலண்ட் அளவு சரியாக இருந்தால், 15 நிமிடங்கள் எஞ்சின் சூடு குறையவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்து கிளம்பவும். பிரச்னை தொடர்ந்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யவும்.

எஞ்சின் பிரச்னை

எஞ்சினில் ஏதாவது பிரச்னை இருப்பது குறித்து இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்து எச்சரித்தால், உடனடியாக அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து அவர்களது வழிகாட்டுதல் பேரில் காரை சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.

கம்ப்யூட்டர் குறியீடு

ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, அங்கு வைக்கப்பட்டிருக்கும் விசேஷ கம்ப்யூட்டர் மூலமாக, பிரச்னையை அவர்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும். நீங்களாவே பிரச்னையை சரி செய்ய முயலாதீர்கள். அது பெரும் பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும்.

க்ளோ ப்ளக் இன்டிகேட்டர்

டீசல் கார்களில் க்ளோ ப்ளக் இன்டிகேட்டர் எச்சரிக்கை விளக்கு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது, வெட்டி விட்ட சுருள் கம்பி போல ஒளிரும். சாவியை போட்டவுடன் அந்த விளக்கானது 10 வினாடிகள் ஒளிர்ந்து அணையும்.

குளிர்கால பிரச்னை

அதன் பின்னரே, எஞ்சினை ஸ்டார்ட் செய்ய வேண்டும். க்ளோ ப்ளக் இன்டிகேட்டர் எரிய வில்லை என்றால் பிரச்னை இருப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும், குளிர் காலங்களில் க்ளோ ப்ளக் இன்டிகேட்டரை கவனமாக பார்த்த பின்னரே, டீசல் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

எரிபொருள் அளவு

எரிபொருள் அளவு குறைவாக இருப்பது குறித்து எச்சரிக்கை ஒளி எரிந்தால், உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிவிடுங்கள். சற்று தூரம் செல்வதற்கான எரிபொருள் இருந்தாலும் கூட, உடனடியாக எரிபொருள் நிரப்புவது அவசியம்.

உபாயம்...

பெட்ரோல் நிலையம் அருகாமையில் இல்லாத நிலையில், காரை 50 முதல் 60 கிமீ வேகத்தில் இயக்க முயற்சிக்கவும். மேலும், அறிமுக இல்லாத ஊர்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும்போது சிறிய கேனில் 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கி டிக்கியில் போட்டுச் செல்வது பயன்தரும்.

கவனம்

எதுவும் முடியாதபட்சத்தில் இந்த வழிமுறைகளை கையாள வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சாலை அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். அனைத்து கார் நிறுவனங்களும் இந்த வசதியை வழங்குவதை மனதில் வைக்கவும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Common Car Engine Problems and Simple Solutions.
Please Wait while comments are loading...

Latest Photos