பின்புற மோதல்களின்போது காரில் ஏர்பேக் விரிவடையுமா?

Written By:

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் மாருதி வேகன் ஆர் கார் மீது பிஎம்டபிள்யூ கார் பின்புறமாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், மாருதி வேகன் ஆர் காரின் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த காரில் ஏர்பேக் இருந்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

அதேநேரத்தில், பின்புறமாக மோதும்போது ஏர்பேக் விரிவடையாது. ஆனால், பிஎம்டபிள்யூ கார் பின்புறமாக மோதிய வேகத்தில் அந்த வேகன் ஆர் கார் 50 மீட்டர் அளவுக்கு தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளது. அந்த சமயத்தில் அந்த மாருதி வேகன் ஆர் கார் ஓட்டுனரின் தலை ஸ்டீயரிங் வீலில் இடித்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

பின்புறமாக மோதும்போது ஏர்பேக் இருந்திருந்தாலும் அது விரிவடைந்திருக்காது. ஆனால், ஓட்டுனர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் படுகாயத்திலிருந்து உயிர் தப்பியிருக்கலாம். அதேநேரத்தில், கார் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தப்போது ஏர்பேக் இருந்து விரிவடைந்திருந்தால், அவரது தலை ஸ்டீயரிங் வீலில் மோதியிருக்காது. அதன்மூலமாக அவர் காப்பாற்றப்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக தெரிவித்திருந்தோம்.

மேலும், ஏர்பேக் இருந்தாலும், சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஓட்டுனர் அல்லது பயணிகள் முழு பாதுகாப்பை பெற முடியும். சீட் பெல்ட் அணியாமல் இருந்து ஏர்பேக் இருந்தால்கூட அது போதிய அளவு பயனை அளிக்காது .

ஏர்பேக்குகளின் பயன் என்பது ஸ்டீயரிங் வீல் மற்றும் கார் ஜன்னல் கண்ணாடிகளால் ஏற்படும் காயங்களையும், மோதலின்போது ஏற்படும் தாக்கத்தால் தலையில் ஏற்படும் காயங்களை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே, பின்புற மோதலின்போது ஏர்பேக் விரிவடையாவிட்டாலும், அந்த கார் மீண்டும் கீழே விழுந்தபோது ஏர்பேக் விரிவடைந்து அந்த ஓட்டுனர் உயிர் பிழைந்திருக்கலாம் என்பதே எமது கருத்து.

ஏர்பேக்குகள் மோதலின் தாக்கம் அதிகம் இருந்தால் மட்டுமே விரிவடையும். சில கார்களில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்றால்தான் ஏர்பேக் விரிவடையும். அதாவது, மணிக்கு 55 கிமீ வேகத்தில் சென்றால் மட்டுமே சில கார்களில் ஏர்பேக் விரிவடையும்.

இருக்கையில் பயணிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏர்பேக்குகள் விரிவடையும். சீட் பெல்ட் அணிந்திருந்தால்தான் ஏர்பேக் விரிவடையும் என்ற கருத்தும் தவறானதே. பயணிகள் இல்லாதபோது ஏர்பேக்கை அணைத்து வைத்து விடுவதும் நல்லது. சில கார்களில் இந்த வசதி இருக்காது.

ஏர்பேக் உள்ள கார்களில் குழந்தைகளை முன் இருக்கையில் அமர வைக்கக்கூடாது என்பதற்கான காரணம், ஏர்பேக் விரிவடையும்போது அது குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பை அளிக்காது என்பதுடன், அது விரிவடையும்போது ஏற்படும் தாக்கம் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

சில வேளைகளில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும்போது விபத்து நிகழ்ந்து ஏர்பேக் விரிவடைந்தால் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு ஏர்பேக்குகளாலேயே காயங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, ஏர்பேக் உள்ள கார்களில் சீட் பெல்ட் அணிந்து அமரும்போதே அதன் பாதுகாப்பை பெறுவதற்கு சாத்தியம்.

பின்புறம் என்றில்லை, பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டாலும், பக்கவாட்டில் கார் உருளும்போதும்கூட ஏர்பேக் விரிவடையாது என்பதையும் மனதில் வைக்க வேண்டிய விஷயம். முன்புறம் மோதலுக்காக மட்டுமே ஏர்பேக் பயன் தரும் விஷயமாக இருக்கும்.

ஏர்பேக் விரிவடையும் தன்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே வேறுபடுகிறது. எனவே, ஏர்பேக் உள்ள கார்களில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை கார் வாங்கும்போதே விற்பனை மையத்தில் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். அதனை பின்பற்றினால், பெரும் விபத்துக்களில் கூட சிறிய காயங்களுடன் உயிர் தப்புவதற்கு உதவியாக அமையும்.

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Story first published: Friday, January 27, 2017, 10:54 [IST]
English summary
Do Airbags Deploy When Hit From The Rear End Collision?
Please Wait while comments are loading...

Latest Photos