காருக்கான அன்டர்பாடி, டெஃப்லான் கோட்டிங் - சாதக, பாதங்கள்

கார் வாங்கியுடன் முதல் சர்வீஸுக்கு செல்லும்போது, சார் டெஃப்லான் கோட்டிங், அன்டர் பாடி கோட்டிங் செய்யணுமா என்று சர்வீஸ் சூப்பர்வைசர் கேட்பது வழக்கம்.

காருக்கு தகுந்தாற்போல் ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை சொல்வதால் பல வாடிக்கையாளர்கள், இது அவசியமா, இல்லையா என்று குழம்புகின்றனர். இந்த நிலையில், இரண்டு கோட்டிங்குகளில் இருக்கும் சாதக, பாதகங்களை பார்க்கலாம்.

அன்டர்பாடி கோட்டிங்

அன்டர்பாடி கோட்டிங்

காருக்கு கீழே சேறு, சகதி மற்றும் தண்ணீரால் எளிதில் துரு பிடிக்கவும், காருக்கு கீழிருக்கும் பாகங்கள் சேதமடையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அன்டர்பாடி கோட்டிங் செய்யப்படுகிறது. உருகிய ரப்பர் போன்ற கெட்டியான பெயிண்ட் அன்டர்பாடி கோட்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. சில கார் நிறுவனங்கள் தொழிற்சாலையில் காரை உற்பத்தி செய்யும்போதே அன்டர்பாடி கோட்டிங் செய்தே அனுப்புகின்றன. இதுதவிர, வெளியில் 3எம் உள்ளிட்ட நிறுவனங்கள் தரமான அன்டர்பாடி கோட்டிங்குகளை விற்பனை செய்கின்றன.

பயன்கள்

பயன்கள்

காருக்கு கீழே துரு பிடிப்பதை தடுக்கும். சிறிய கற்கள் மற்றும் மரத் துண்டுகளால் காருக்கு கீழே ஏற்படும் சேதங்களை தவிர்க்க உதவும். குறிப்பாக, கடற்கரை பகுதிகளில் கார் வைத்திருப்பவர்கள் இந்த அன்டர்பாடி கோட்டிங் செய்வது அவசியம்.

சப்த குறைப்பு

சப்த குறைப்பு

அன்டர்பாடி கோட்டிங் மூலம் கார் கேபினுக்குள் வரும் சப்தத்தின் அளவு குறையும். டயர்களிலிருந்து கேபினுக்கு வரும் அதிர்வுகள், சப்தத்தையும் கிரகிக்கும் தன்மை கொண்டது.

பராமரிப்பு எளிது

பராமரிப்பு எளிது

கருப்பு நிறத்திலான அன்டர்பாடி கோட்டிங் பூசப்படுவதால், சர்வீஸ் செய்யும்போது எளிதாக காரின் கீழ்ப்பாகத்தில் சுத்தம் செய்ய முடியும். தற்போது 5 ஆண்டுகள் வாரண்டியுடன் அன்டர்பாடி கோட்டிங்குகள் செய்யப்படுகின்றன.

விலை அதிகம்

விலை அதிகம்

அன்டர்பாடி கோட்டிங் செய்வதற்கான கட்டணம் தற்போது அதிகமாக இருக்கிறது. இது அவசியமானதாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் எப்படியும் பணம் வாங்கிவிடலாம் என்று டீலர்களும் அதிக கட்டணங்களை நிர்ணயித்துள்ளனர்.

பழுது அபாயம்

பழுது அபாயம்

இந்த கெட்டியான பெயின்ட்டை காருக்கு கீழ் ஸ்பிரே செய்யும்போது மிகுந்த கவனம் தேவை. யு ஜாயிண்ட் மற்றும் சிவி ஜாயிண்ட், டிரைவ்சாஃப்ட் ஆகிய இணைப்புகளுக்குள் படிந்துவிட்டால் பிரச்னையாகிவிடும். தவிர, சஸ்பென்ஷன் இயக்கத்திலும் பிரச்னை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். கூடுதலாக ஸ்பிரே செய்தாலும் பிரச்னைதான். சரி, அடுத்ததாக, டெஃப்லான் கோட்டிங் பற்றி பார்க்கலாம்.

டெஃப்லான் கோட்டிங்

டெஃப்லான் கோட்டிங்

பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் பகுதிகளை சிறிய கீறல்கள், தூசிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பூசப்படும் சீலண்ட்தான் டெஃப்லான் கோட்டிங். கார் பெயிண்ட்டை பாதுகாப்பதோடு, பளபளப்பையும் அளிக்கும்.

 கீறல்களை தடுக்கும்

கீறல்களை தடுக்கும்

டெஃப்லான் கோட்டிங் செய்யும்போது காரின் வெளிப்புறம் வழுவழுப்பாக இருக்கும் என்பதால் சிறிய அளவிலான கீறல்கள் விழாது. சிலர் துணிகளை வைத்து காரை துடைக்கும்போது ஏற்படும் கீறல்களும் ஏற்படாது.

தெறிப்புகளை மூடும்

தெறிப்புகளை மூடும்

காரின் மேல்புறத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய பள்ளங்கள், தெறிப்புகளும் அடைபட்டுவிடும் என்பதால் புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

பாதகங்கள்

பாதகங்கள்

டெஃப்லான் கோட்டிங்கள் நீண்ட ஆயுட்காலத்தை பெற்றிருப்பதில்லை. சீதோஷ்ண நிலையை பொறுத்து டெஃப்லான் கோட்டிங் போய்விடும். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது டெஃப்லான் கோட்டிங் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஹார்டு வேக்ஸ் கோட்டிங் செய்ய வேண்டும். இது விலை குறைவு என்றாலும் அடிக்கடி செய்ய வேண்டும் என்பதும் குறையாக சொல்லலாம்.

விலை அதிகம்

விலை அதிகம்

டெஃப்லான் கோட்டிங் செய்வதற்கு ரூ.3,000 வரை டீலர்களில் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த அளவுக்கு செலவு ஆகாது என்றாலும், இதில், அதிக லாபம் வைத்து கட்டணம் நிர்ணயிக்கின்றனர் என்பது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை அளிக்கிறது.

Most Read Articles
English summary
Getting an under body coating applied to your new car is important for several reason. Here are are few important points about Teflon coating & under body coating for your car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X