நெடுஞ்சாலையில் கார் ஓட்டும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிகள்!

Written By:

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் நெடுஞ்சாலைகளின்  தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சிறந்த கட்டமைப்புடன் அமைக்கப்படும் சாலைகளால் விபத்துக்கள் குறையும் என்று கருதப்பட்ட நிலையில், மாறாக தற்போது நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக, கோடை விடுமுறை காலங்களில் விபத்துக்கள் அதிகம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நீண்ட தூரம் பயணிப்போர் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிப்போர் சில வழிகளை மனதில் வைத்தால் விபத்துக்களை அறவே தவிர்க்க வழி கிடைக்கும்.

நீண்ட தூர பயணம் புறப்படும்போது காரை ஓட்டுபவர் போதிய ஓய்வு எடுத்திருப்பது அவசியம். தூக்கமின்மை, மன அழுத்தத்தில் இருக்கும்போது கார் ஓட்டுவதையோ, பயணம் கிளம்புவதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.

அடுத்து கார் நல்ல கண்டிஷனில் இருப்பதும் அவசியம். அதிகம் தேய்ந்த டயர்களை மாற்றிவிட்டு புறப்படுங்கள். பிரேக் சிறப்பாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். சிலர் பேசிக் கொண்டே செல்லும்போது கவனம் சிதறி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். சிலர் பேசிக் கொண்டே செல்லும்போது கவனம் சிதறி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். சிலர் பேசிக் கொண்டே செல்லும்போது கவனம் சிதறி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

மது அருந்தினால் கார் ஓட்டுவதை தவிர்க்கவும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் எக்கச்சக்கமான விபத்துக்கள் நடக்கின்றன.

நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் வகையில் வரும் வாகனங்களுடன் போட்டி போட வேண்டாம். வழிவிட்டு விடுங்கள். மேலும், சிறிய விஷயங்களுக்காக சண்டை போடுவதையும் தவிர்த்துக் கொள்ளவும். இதனால், பிபி எகிறி, கார் ஓட்டும்போது தவறுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

எந்த ஒரு வாகனத்தையும் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து செல்ல வேண்டாம். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் இது மோசமான விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் வையுங்கள்.

ஸ்டீயரிங் வீலை இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு ஓட்டவும். ஒரு கையால் ஓட்டுவது, தண்ணீர் பாட்டிலை பிடித்துக் கொண்டு, கைகளை எடுத்துவிட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அதிவேக தடத்தில் தொடர்ந்து பயணிக்காதீர். ஓவர்டேக் செய்யும்போது மட்டும வலது ஓரத்தில் இருக்கும் அதிவேக தடத்தை பயன்படுத்த வேண்டும்.

சீரான வேகத்தில் செல்ல பழகிக் கொள்ளுங்கள். வேக வரம்பு குறித்த எச்சரிக்கையை மனதில் வைத்து ஓட்டவும். பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் வேகத்தை குறைத்து நிதானமாக செல்லவும்.

இரவு நேர பயணத்தை அறவே தவிர்க்கவும். அதுபோன்றே, அதிகாலை 4 மணிக்கு பயணம் கட்டுவதையும் தவிர்க்கவும். விடிந்த பின்னர் பயணத்தை துவங்குவதே சாலச் சிறந்தது.

நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை சந்திப்புகளை கவனமாக கடக்கவும். சில வேளைகளில் கனரக வாகனங்கள் மிக வேகமாக திரும்புவதற்கு முற்படும் வாய்ப்பு இருக்கிறது.

மழை உள்ளிட்ட மோசமான வானிலைகளின்போது வேகத்தை குறைத்து, நிதானமாக செல்லுங்கள். அவசரப்பட்டால் விபத்து நிச்சயம் என்பதை மனதில் வைத்து விவேகமாக செயல்படவும்.

நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது காரை நிறுத்தி 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். காருக்கும் ஓய்வு கொடுங்கள்.

English summary
Highway Driving: Tips To Avoid Accident.
Please Wait while comments are loading...

Latest Photos