டீசல் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான சில வழிமுறைகள்

Diesel car Driving
உச்சம் என்று குறிப்பிட்டுள்ளது மைலேஜைதான். பெட்ரோல் விலை விரட்டி அடித்து அரட்டி வரும் வேளையில் டீசல் கார்கள்தான் சிறந்த தீர்வாக இருக்கின்றன. அதிக மைலேஜ்தான் இதற்கு முக்கிய காரணம். குறைவான சப்தம், நவீன தொழில்நுட்பம் கொண்டதாக டீசல் எஞ்சின்கள் மேம்பட்டிருக்கின்றன.

பெட்ரோல் காரை போன்று ஓட்டினால் நிச்சயம் அது மைலேஜில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, டீசல் கார் ஓட்டும்போது டிரைவிங் பழக்கத்தை சிறிதளவு மாற்றிக் கொண்டால் சிறப்பான மைலேஜ் பெறுவதோடு, ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும். டீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்.

பிக்கப்:

டீசல் கார்கள் குறைந்த எஞ்சின் சுழல் வேகத்தில்(ஆர்பிஎம்) அதிக டார்க்கை வெளிப்படுத்தும். எனவே, காரை கிளப்பும்போது மிதமான வேகத்தில் ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும். வேகமாக கிளப்பினால் என்ன என்கிறீர்களா?, ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கும் 2 லிட்டர் டீசலை கூடுதலாக ஊற்ற வேண்டியிருக்கும்.

இதனை ஒப்பிடும்போது கிட்டதட்ட பெட்ரோலுக்கு இணையான தொகையை டீசலுக்கும் அழ வேண்டியிருக்கும். எனவே, காரை கிளப்பும்போது ஆக்சிலேட்டரை மிதமாக கொடுத்து வேகமெடுக்க பழகிக்கொள்ளுங்கள். சிலர் டீசல் கார் மைலேஜ் கொடுக்கவில்லை என்று புலம்புவதும் அவர்களின் டிரைவிங் பழக்கத்தால் கூட இருக்கலாம். எனவே, டீசல் காரை பூப்போல கையாள பழகிக் கொள்ளுங்கள். மைலேஜில் உச்சத்தை நிச்சயம் தரும்.

குரூஸ் கன்ட்ரோல்:

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது குரூஸ் கன்ட்ரோல் இருந்தால் அவசியம் பயன்படுத்துங்கள். காலால் ஆக்சிலேட்டரை கொடுத்து ஓட்டும்போது சீரான வேகத்தில் செல்ல முடியாது. எனவே, குரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தி ஓட்டினால் அதிக மைலேஜ் பெறுவதோடு, காரின் எஞ்சினும் சிறப்பாக இயங்கும். நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்வதை தவிர்த்தாலும் அதிக மைலேஜ் பெறலாம்.

கியர் மாற்றும் கலை:

சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் கியரை மாற்றினால் அதிக மைலேஜ் கிடைக்கும். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லும்போது அதிக கியர்களில் (4 அல்லது 5 வது கியர்) செல்வதை தவிர்க்கவும். வேகத்துக்கு தக்கவாறு கியர் என்பது கூடுதல் மைலேஜுக்கு உத்தரவாதம். சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கியரில் வைத்தும் காரை எஞ்சினை நிறுத்த வேண்டாம். நியூட்ரலில் வைத்து மட்டுமே நிறுத்தவும்.

ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்களை தேவையில்லாதபோது பயன்படுத்துவதை தவிருங்கள். சீட் வார்மர், டிஃப்ராஸ்ட் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம்.

Most Read Articles
English summary
The mileage or fuel efficiency of a diesel car is one of the most important aspects that car buyers consider before buying a car. your driving style is another important factor. So to improve a diesel car's mileage you not only need to keep it in top working condition but also change your driving style.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X