கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழி!

கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழிமுறையை இந்த செய்தியில் காணலாம்.

கார் வாங்கும்போது ஆண்டு கடைசியில் வாங்குவதை பலரும் தவிர்ப்பதுண்டு. ஓர் ஆண்டு வித்தியாசத்தை தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு இறுதியில் கார் வாங்குவதை தவிர்த்து, விலை உயர்ந்தாலும் பரவாயில்லை புத்தாண்டில் கார் வாங்கினால் சிறப்பானது என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தங்களது கார் வாங்கும் படலத்தை புத்தாண்டில் பலரும் துவங்கியிருக்கின்றனர். ஆனால், புத்தாண்டு துவங்கினாலும் இருப்பில் தேங்கியிருக்கும் கார்களை இப்போது விற்பனை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழி!

ஏனெனில், வாடிக்கையாளர்கள் இன்வாய்ஸ் போடப்படுவதை வைத்து, 2018ம் ஆண்டு மாடல் என்று நம்பி பலர் வாங்கிவிட வாய்பப்புள்ளது. ஆனால், காரின் தயாரிப்பு தேதிதான் மறு விற்பனையின்போது பார்க்கப்படும். எனவே, புத்தாண்டில் கார் வாங்குவோர் கடந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட காரை கண்டறிந்து வாங்குவதை தவிர்ப்பது அவசியம். இந்தநிலையில், 2017ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு தயாரிப்பு தேதியை எளிதாக கண்டறிந்து வாங்குவதற்கான எளிய உபாயத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 வின்' நம்பர்

வின்' நம்பர்

அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு காருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை (வின் சேஸி நம்பர்)குறிப்பிடுகின்றன. வின் நம்பர் பயன் வின் சேஸி நம்பரில் கார் தயாரிக்கப்பட்ட மாதம் மற்றும் வருடத்தை துல்லியமாக குறிப்பிடுகின்றன.

கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழி!

பூதாகரமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை குறியீட்டு எழுத்தாக கார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் எண்களையும் குறியீடாக பயன்படுத்துகின்றன.

வின் நம்பர் இலக்கம்

வின் நம்பர் இலக்கம்

பெரும்பாலான நிறுவனங்கள் 17 எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட வின் நம்பர் குறியீட்டை பயன்படுத்துகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் அதிக வின் நம்பர்களை பயன்படுத்துகின்றன. அதாவது, 22 இலக்க வின் நம்பர்களை பயன்படுத்துகின்றன. மேலும், தயாரிப்பு மாதம் மற்றும் ஆண்டு ஆகியவற்றை குறிப்பிட்ட ஆங்கில எழுத்து மற்றும் எண்களை வைத்து வின் நம்பர் குறியீடுகள் கொடுக்கப்படுகின்றன.

மாதக் குறியீடுகள்:

மாதக் குறியீடுகள்:

A-ஜனவரி, B-பிப்ரவரி, C- மார்ச், D-ஏப்ரல், E-மே, F- ஜூன், G- ஜூலை, H- ஆகஸ்ட், J- செப்டம்பர், K-அக்டோபர், L-நவம்பர், M- டிசம்பர்.

ஆண்டு குறியீடுகள்:

ஆண்டு குறியீடுகள்:

A- 2010, B- 2011, C- 2012, D- 2013, E- 2014, F- 2015, G- 2016, H- 2017, J- 2018, K- 2019 என்று குறிக்கப்படுகின்றன. இது பெரும்பாலான நிறுவனங்களுக்கு பொதுவான குறியீடுகள்.

கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழி!

உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படு்த்தும் 17 எழுத்துக்களில் 10வது எழுத்து வருடத்தையும், 12- வது எழுத்து மாதத்தையும் குறிப்பிடுகிறது. இந்த குறியீட்டு எழுத்துக்கள் ஒன்றுதான் என்றாலும், எழுத்து வரிசை முறை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது.

கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழி!

கண்டறியும் முறை டாடா மோட்டார்ஸ் கார் ஒன்றின் வின் நம்பரில் 10 வது எழுத்து G என்றும் 12 வது எழுத்து A என்றும் இருந்தால், அந்த கார் 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தயாரிக்கப்பட்ட கார் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

கார் தயாரிப்பு வருடத்தை கண்டறிவதற்கான எளிய வழி!

வருடத்தை எளிமையாக கண்டறிவதற்கு ஒரே உபாயம் இதுதான். வின் நம்பரின் 10வது இலக்கம் F என்று இருந்தால் 2015ம் ஆண்டையும், G என்று இருந்தால் 2016ம் ஆண்டையும், H என்று இருந்தால் 2017ம் வருடத்தையும் குறிக்கும். இதை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

மஹிந்திரா

மஹிந்திரா

ஆனால், இந்த இலக்க வரிசை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது. மஹிந்திரா மஹிந்திரா பயன்படுத்தும் மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 10வது எழுத்து வருடத்தையும், 12 வது எழுத்து மாதத்தையும் குறிக்கும்.

செவர்லே:

செவர்லே:

செவர்லே பயன்படுத்தும் மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 7 வது எழுத்து மாதத்தையும், 9 வது எழுத்து வருடத்தையும் குறிக்கும்.

ஹோண்டா கார்ஸ்:

ஹோண்டா கார்ஸ்:

மொத்தம் 17 எழுத்து மற்றும் எண்களில் 9 வது எழுத்து மாதத்தையும், 10 வது ஆங்கில எழுத்து வருடத்தையும் குறிக்கும்.

ஃபோக்ஸ்வேகன்:

ஃபோக்ஸ்வேகன்:

ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் 4வது எழுத்து மாதத்தையும், 10-வது எழுத்து காரின் மாடல் வருடத்தையும் குறிக்கும்.(சில கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை ஆண்டு பெயரை குறிப்பிட்டு மாடலை அழைக்கிறது.

 ஸ்கோடா ஆட்டோ:

ஸ்கோடா ஆட்டோ:

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் 6வது எழுத்தை மாதத்திற்கும், 10வது எழுத்தை வருடத்தை குறிப்பதற்கும் பயன்படுத்துகிறது. வின் வரிசையில் 6வது எழுத்து சி என்றும் 10 வது எழுத்து பி ஆங்கில எழுத்தாக இருந்தால் அது 2011ம் ஆண்டு மார்ச்சில் தயாரிக்கப்பட்ட கார்.

ஃபியட்:

ஃபியட்:

ஃபியட் நிறுவனம் தனது கார்களில் 20 இலக்க வின் நம்பராக பயன்படுத்துகிறது. வின் வரிசையில் 18 வது எழுத்தை மாதத்திற்கும், 19 மற்றும் 20வது இடத்தில் உள்ள எழுத்துக்கள் வருடத்தையும் குறிக்கும். அதாவது, ஆண்டு குறியீடாக இரண்டு ஆங்கில எழுத்துக்களை ஃபியட் பயன்படுத்துகிறது.

மாருதி சுஸுகி:

மாருதி சுஸுகி:

மாருதி நிறுவனம் 21 இலக்க எண்களை பயன்படுத்துகிறது. 20வது எழுத்து மாதத்தையும், 21வது எழுத்து ஆண்டையும் குறிக்கிறது.

ஃபோர்டு:

ஃபோர்டு:

ஃபோர்டு கார்களின் வின் நம்பரின் 11வது இலக்கம் வருடத்தையும், 12வது இலக்கம் மாதத்தையும் குறிக்கும். ஆனால், மாதக் குறியீடுகள் மாறுகின்றன. அவற்றை கீழே காணலாம். ஃபோர்டு மாதக் குறியீடுகள்: L- ஜனவரி, Y- பிப்ரவரி, S- மார்ச், T- ஏப்ரல், J- மே, U- ஜூன், M- ஜூலை, P- ஆகஸ்ட், B- செப்டம்பர், R- அக்டோபர், A-நவம்பர், G- டிசம்பர்.

ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் நிறுவனத்தின் 10வது இலக்கம் வருடத்தையும், 19வது இலக்கம் மாதத்தையும் குறிக்கும்.

 டொயோட்டா:

டொயோட்டா:

டொயோட்டா ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக எண்களையே குறியீடாக பயன்படுத்துகிறது. அதாவது, இதன் வின் நம்பரின் கடைசி 21வது மற்றும் 22வது இலக்கங்கள் 14 என்று முடிந்தால், 2014ம் ஆண்டை குறிக்கும்.

ரெனோ மற்றும் நிசான்

ரெனோ மற்றும் நிசான்

ரெனோ மற்றும் நிசான் கார் நிறுவனங்கள் 10வது எழுத்து வருடத்தையும், 11வது இலக்கத்தில் உள்ள எழுத்து மாதத்தையும் குறிப்பிடுகின்றன.

வின் நம்பர் எங்கெங்கு குறிக்கப்பட்டிருக்கும்?

வின் நம்பர் எங்கெங்கு குறிக்கப்பட்டிருக்கும்?

எஞ்சின் அமைந்திருக்கும் பகுதியின் இடது ஓரத்தில் ப்ரேமில் குறிக்கப்பட்டிருக்கும். ஓட்டுனர் பக்கம் கதவை திறந்து பார்த்தால், ஃப்ரேமில் குறிக்கப்பட்டிருக்கும். சில கார்களில் டேஷ்போர்டிலும் குறிக்கப்பட்டிருக்கும். இன்வாய்ஸ் போடுவதற்கு முன்னர் வின் நம்பரை கண்டறிந்து 2016ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காரா என்பதே டீலரிடம் தெரிவித்துவிடவும். இன்வாய்ஸ் போட்டுவிட்டால் எதுவும் செய்ய இயலாது என்று டீலரில் கையை விரித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.


அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் வாகனங்கள் அவசர நிலையை சந்திக்கும் போது, அதை சாதுர்யமாக சமாளித்து தப்பிப்பது போன்ற பல வைரலான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் உள்ளன.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

இதுபோன்ற வீடியோக்கள் வந்தாலே அவை டிரென்டிக்கும் என்பதை தாண்டி, சாலையில் செல்லும் போது நாமும் விழிப்புடன் செயல்பட உதவும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்று ஒரு சாலை பரபரப்பு இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் வைரலை கிளப்பியுள்ளது.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற மாவட்டத்தின் சகர்காட் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த ஒரு மாருதி பலேனோ கார், அவசர நிலை ஏற்பட்டதன் காரணமாக பறந்து சென்று ஒரு வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கியது.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

பாதிப்பை சந்தித்துள்ள பலேனோ கார் விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் சகர்காட் சாலையில் வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

அப்போது, அங்கே வளைவு ஒன்று வர கார் ஓட்டுநர் அதில் காரின் வேகத்தை குறைத்து திருப்ப முயன்றுள்ளார். ஆனால் கார் சாலை தடுப்பை மோதி வானில் பறந்தது.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

கார் பறந்து சென்ற பகுதியில் ஒரு வீடு இருந்ததால், அதன் மேற்கூரையில் தரையிறங்கி அங்கியிருந்த ஒரு கட்டிடத்தில் மோதி மாருதி பலேனோ கார் நின்றது.

சாலையிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. இவ்வளவு அளவுக்கொண்ட தூரத்தையும் ஒரே பாய்ச்சலில் பறந்து வீட்டின் மேற்கூரையில் இறங்கியுள்ளது இந்த பலேனோ கார்.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மேலும் காரில் பயணம் செய்வதர்கள் சில காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மாண்டி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

மேற்கூரை சிறியளவில் இருந்ததால், கார் அங்கியிருந்த கட்டிடத்தில் மோதி நின்றது. இதுவே கொஞ்சம் நீளமாக இருந்திருந்தால் கார் அப்படியே சென்று மேற்கூரையில் இருந்து தரையில் விழுந்திருக்கும்.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விரைந்து காரிலிருந்த ஓட்டுநரை மீட்டு தரையில் இறக்கிவிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

மேற்கூரை கட்டிடத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. மேலும் ஓட்டுநர் சீட் கதவும் திறந்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதை தவிர காரில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

தரையிலிருந்து 20அடி தூரத்திற்கு பறந்து வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கிய பின்னும் காரில் பெரிய சேதாராம் ஏற்படவில்லை. தொடர்ந்து கார் பயணியும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இதனால் பலேனோவின் கட்டமைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

டெல்டா வேரியன்டான இந்த மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #டிப்ஸ் #tips #auto tips
English summary
Here is an easy way to identify and decode manufacturing year of Car through VIN Chassis Number.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X