காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் எகிறிக் கொண்டே செல்கிறது. இந்த சூழலில் எரிபொருள் சிக்கனம் என்பது ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் மிக முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது.

மாத பட்ஜெட்டில் எரிபொருளுக்கு அதிக தொகையை செலவிடுவதை தவிர்ப்பதற்கு, சில எளிய வழிமுறைகளை கையாண்டால், கூடுதல் மைலேஜை பெற முடியும். இதன்மூலம், எரிபொருள் விலையேற்றத்தை செவ்வனே சமாளிக்கலாம். ஸ்லைடரில் சில எளிய வழிமுறைகளை காணலாம்.

நகர்ப்புறத்தில்...

நகர்ப்புறத்தில்...

நகர்ப்புறங்களில் ஓட்டுவோர் காரை வெடுக் வெடுக் என நகர்த்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்லும்போது எஞ்சினை வேகமாக இயக்குவதையும், திடீரென பிரேக் போட்டு நிறுத்தும் அவசியத்தை தவிர்க்கலாம். இது நிச்சயம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும்.

சிக்னல்களில்...

சிக்னல்களில்...

சிக்னல்களில் 60 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால் எஞ்சினை ஆஃப் செய்து வைக்கலாம். பல சிக்னல்களில் எத்தனை வினாடிகளில் சிக்னல் மாறும் என்பதை காட்டும் டைமர்கள் இருப்பது உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்க உதவும் விஷயமே.

 நெடுஞ்சாலையில்...

நெடுஞ்சாலையில்...

நெடுஞ்சாலையில் பயணிப்போர் மணிக்கு 60 கிமீ முதல் 80 கிமீ வேகத்திற்கு மிகாமல் செலுத்தினால், எதிர்பார்த்ததைவிட அதிக மைலேஜ் கிடைக்கும். க்ரூஸ் கன்ட்ரோல் வசதி தற்போது பல கார்களில் கிடைக்கிறது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

ஏசி இல்லாமலா...

ஏசி இல்லாமலா...

காரில் ஏசி.,யை பயன்டுத்தும்போது எஞ்சின் கூடுதல் திறனை அளிக்க வேண்டி அதிக எரிபொருளை உட்கொள்ளும். இதனால், மைலேஜ் குறையும். ஆனால், வெயில், தூசி என நம் நாட்டு தட்பவெப்ப நிலை மற்றும் சுற்றுப்புறம் காரின் கதவை திறந்து வைக்க அனுமதிப்பதில்லை. இருப்பினும், சீதோஷ்ண நிலை சிறப்பாக இருக்கும்போதும், குறைவான வேகத்தில் செல்லும்போதும் ஏசி., பயன்பாட்டை தவிர்க்கலாம். இது கூடுதல் மைலேஜிற்கு உத்தரவாதம் அளிக்கும்.

ஜன்னல்களை மூடுவதும்...

ஜன்னல்களை மூடுவதும்...

க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி இருந்தால் ஆட்டோமேட்டிக் வசதியை அணைத்துவிட்டு, குறைவான வேகத்தில் புளோயர்களை வைக்கலாம். அதேவேளை, நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லும்போது கண்ணாடி ஜன்னல்களை மூடி விட்டு ஏசி.,யை போட்டுச் செல்லுங்கள். இது காரின் ஏரோடைனமிக்ஸை அதிகரித்து அதிக எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும்.

டயரில் காற்றழுத்தம்

டயரில் காற்றழுத்தம்

டயரில் பரிந்துரைக்கப்பட்ட அளவு காற்றழுத்தத்தை வைத்திருத்தாலே 3 சதவீதம் கூடுதல் மைலேஜை பெற முடியும். நீண்ட தூர பயணங்கள் செல்லும்போது, அலாய் வீல்களில் லோ புரோஃபைல் டயர்களை பொருத்தியிருந்தால், சாதாரண டயர்களை மாற்றி எடுத்துச் செல்லும்போது அதிக மைலேஜ் கிடைக்கும். லோ புரோஃபைல் டயர்கள் அதிக உராய்வுத் தன்மை, தரை பிடிமானம் கொண்டதால் மைலேஜ் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

பராமரிப்பு

பராமரிப்பு

குறித்த இடைவெளியில் சர்வீஸ் செய்வதும் காரின் மைலேஜ் சிறப்பாக இருப்பதற்கான முக்கிய காரணம். ஏர் ஃபில்டர், ஃப்யூவல் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக்குகளை சோதிக்க தவறாதீர். 60,000 கிமீ ஓடிய கார்களில் ஆக்சிஜன் சென்சாரையும் சோதிக்க வேண்டும். ஆக்சிஜன் சென்சாரில் பிரச்னை இருந்தால், காரின் மைலேஜ் 20 சதவீதம் வரை குறையும்.

 ஆட்டோமேட்டிக் கார்

ஆட்டோமேட்டிக் கார்

ஆட்டோமேட்டிக் கார் வைத்திருப்பவர்கள் வாய்ப்பு இருக்கும் சமயங்கள் மற்றும் நெரிசல் குறைந்த சாலைகளில் செல்லும்போது மேனுவல் மோடில் வைத்து ஓட்டலாம். இதன்மூலம், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

 தரமான எரிபொருள்

தரமான எரிபொருள்

வீட்டுக்கு அருகில் அல்லது அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் தரமான எரிபொருள் வழங்கும் நிலையங்களை கண்டறிந்து அதிலேயே எரிபொருள் நிரப்புவதை வழக்கமாக்கிக் கொள்வதும் கூடுதல் எரிபொருளுக்கு உதவும். அத்துடன், காரின் எஞ்சினும் நீடித்த ஆயுளை பெறும்.

வழித்தடம்

வழித்தடம்

வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதற்கு வெவ்வேறு வழிகளை பயன்படுத்தி பாருங்கள். அதில், குறைவான தூரம் மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் குறைவாகவும், விரைவாகவும் செல்லும் வழித்தடங்களை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

சுமை

சுமை

காரில் இருக்கும் கேரியர் உள்ளிட்ட தேவையில்லாத ஆக்சஸெரீகள் இருந்தால் கழற்றி வைத்துவிடவும். மேலும், வெளியூர் பயணங்களின்போது முடிந்தவரை உடைமைகளை குறைத்து எடுத்துச் செல்ல பழகிக் கொள்ளுங்கள். பலர் பிக்கப் டிரக் போன்று காரில் பொருட்களை ஏற்றிச் செல்வதை காண முடிகிறது.

இன்றே ரிசல்ட்

இன்றே ரிசல்ட்

இந்த செய்தித் தொகுப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால், உங்கள் காரின் மைலேஜ் இன்றே அதிகரிக்கும். அத்துடன், நேற்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு உங்களின் இந்த மாத பட்ஜெட்டை பாதிக்காது என்று கருதலாம்.

Most Read Articles
English summary
How to Increase Your Car’s Fuel Economy - Tips In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X