காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதற்கான வழிமுறைகள்!

விளக்குகளை ஆஃப் செய்யாமல் சென்றுவிடுதல், நீண்ட நாட்கள் நிறுத்தியிருப்பது போன்ற சூழ்நிலைகளில், கார் பேட்டரியில் சார்ஜ் முழுமையாக தீர்ந்து போவது இயல்பு. இதனால், காரை செல்ஃப் ஸ்டார்ட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அவசரத்தில் வெளியே கிளம்பும்போது இதுபோன்று கார் ஸ்டார்ட் ஆகவில்லையெனில், சோதனையாக அமைந்துவிடும்.

பழைய கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்னை அவ்வப்போது ஏற்படும். காரின் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கான சூழ்நிலை இல்லாதபோது, காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது ஒரு யுக்தி. இது பலருக்கு தெரிந்த பழைய யுக்தியாக இருந்தாலும், தெரியாதவர்களுக்கு பயன்படும் வகையில், அதற்கான வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.


சில வழிமுறைகள்

சில வழிமுறைகள்

காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதற்கான வழிமுறைகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

சோதனை

சோதனை

அன்று தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக அருண் அலுவலகத்திலிருந்து பர்மிஷன் போட்டு கிளம்பினார். தனது காரை செல்ஃப் ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. பலமுறை முயற்சிக்கு பலனில்லை. இதனால், அருணுக்கு என்ன செய்வதென தெரியாமல் தவித்தார்.

நண்பர் உதவி

நண்பர் உதவி

உடனே, சுதாரித்துக் கொண்டு தனது அலுவலக நண்பர்களுக்கு போன் செய்து உதவிக்கு அழைத்தார். அவரது நண்பர் நவீன் மற்றும் பிரதாப், சதீஷ் ஆகியோர் கார் இருந்த இடத்திற்கு வந்தனர். அருணை சமாதானப்படுத்திய நவீன் கார் ஸ்டார்ட் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

 பேட்டரி செக்கப்

பேட்டரி செக்கப்

பானட்டை திறந்து பேட்டரியில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்கள் சரியாக இருக்கிறதா என்பதை நவீன் சோதித்தார். அதில், எந்த பிரச்னையும் இல்லையென்று உறுதி செய்து கொண்ட பின், தனக்கு தெரிந்த பழைய யுக்தியின்படி, காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ய முடிவு செய்தார்.

முதல் விஷயம்

முதல் விஷயம்

காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதற்காக சாவியை போட்டு இக்னிஷனை ஆனில் வைத்தார்.

இரண்டாவது விஷயம்

இரண்டாவது விஷயம்

காரின் கிளட்ச்சை முழுவதுமாக மிதித்துக் கொண்டு, காரை ஸ்டார்ட் செய்வதற்கு ஆயத்தமானார்.

எந்த கியர்

எந்த கியர்

இதுபோன்று காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யும்போது முதல் கியரைவிட இரண்டாவது கியரில் வைத்தே ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஏனெனில், முதல் கியரில் வைத்தால் கியருக்கு அதிகப்படியான சுமை ஏற்படும். ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் அதிர்வும் குறைவாக இருக்கும் என்று தனது முயற்சிகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த அருணுக்கு விளக்கினார்.

 ஹேண்ட்பிரேக் ரிலீஸ்

ஹேண்ட்பிரேக் ரிலீஸ்

கார் இக்னிஷை ஆன் பொஷிசனில் வைத்த பிறகு, காரில் கால் பிரேக்குகளை பிடித்துக் கொண்டு ஹேண்ட்பிரேக்கை ரிலீஸ் செய்தார்.

அப்புறம்...

அப்புறம்...

தனது அலுவலக நண்பர்கள் பிரதாப், சதீஷ் மற்றும் அருண் ஆகியோரை காரை முன்னோக்கித் தள்ளுமாறு கூறினார்.

போதும்...

போதும்...

ஓரளவு வேகமாக கார் நகரத்துவங்கிய பின் காரை தள்ளுவதை நிறுத்திவிடுமாறும் கூறினார். சரியென்று தலையாட்டி அவர்கள் கிடுகிடுவென காரை முடிந்தவரை வேகமாக தள்ளிவிட்டு விலகினர்.

 ஸ்டார்ட் ஆயிடுச்சு

ஸ்டார்ட் ஆயிடுச்சு

கார் ஓரளவு வேகமாக நகரத்துவங்கியவுடன் கிளட்சை வேகமாக ரிலீஸ் செய்த நவீன் காரை ஸ்டார்ட் செய்து இடைஞ்சல் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி, சிறிது நேரம் காரை நிறுத்தாமல் ஓடவிட்டு பேட்டரியில் சார்ஜ் ஏறிய பின் அருணை அழைத்த நவீன் எஞ்சினை ஆஃப் செய்து விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். பின்னர், அருண் நன்றி தெரிவித்துக் கொண்டு தனது மகனின் பிறந்தநாள் விழாவுக்கு சரியான சமயத்தில் சென்றுவிட முடியும் என்று நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

இன்னொரு உபாயம்

இன்னொரு உபாயம்

பேட்டரி முழுமையாக சார்ஜ் இல்லாத சமயத்தில் அருகில் பேட்டரி பராமரிப்பு கடை இருந்தால், அவர்களிடத்தில் உள்ள பேட்டரியை எடுத்து வந்து உங்களது காரை ஸ்டார்ட் செய்து கொடுத்துவிடுவர். அதற்கு ரூ.100 வரை வாங்குகின்றனர். அப்படியும் இல்லையெனில், அடுத்த ஸ்லைடில் மற்றொரு உபாயம் உள்ளது.

ஜம்ப் ஸ்டார்ட்

ஜம்ப் ஸ்டார்ட்

அந்த இரண்டு உபாயங்களும் ஒத்துவராவிட்டால், இன்னொரு உபாயமான ஜம்ப் ஸ்டார்ட் செய்து காரை ஸ்டார்ட் செய்யலாம். அதற்கான வழிமுறைகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
We've put together an easy-to-understand guide to push starting your car, so read on and be informed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X