டீசல் காரில் அதிர்வுகளை குறைக்க 5 சிறந்த வழிகள்!

By Saravana

டீசல் கார்களின் மிகப்பெரிய குறையாக கருதப்படுவது, கேபினில் அதிக அதிர்வுகளையும், சப்தத்தையும் வழங்குவதாகவே இருக்கும். சிறப்பான சப்த தடுப்பு கொண்டதாக பிரபலப்படுத்தப்படும் டீசல் கார்களை பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது சற்று கூடுதலான அதிர்வுகளை கொண்டிருப்பதை மறுக்க இயலாது.

அதிக தூரம் பயன்படுத்துவோர் டீசல் கார்களையே வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர். அவ்வாறு, டீசல் காரை வாங்கும்போது, கேபினில் சப்தம் குறைவாக இருப்பதற்கு செய்ய வேண்டிய சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

01. எஞ்சின் கவர்

01. எஞ்சின் கவர்

சில கார்களில் எஞ்சின் கவர் இல்லாமல் வரும். அவ்வாறு வரும் டீசல் எஞ்சினுக்கு இலகு எடை கொண்ட அலுமினியத்தாலான கவர் அல்லது பேடு பொருத்துவது அதிர்வுகளையும், சப்தத்தையும் வெகுவாக குறைக்கும்.

02. எஞ்சின் ஆயில்

02. எஞ்சின் ஆயில்

சாதாரண மினரல் எஞ்சின் ஆயிலுக்கு பதிலாக சிந்தெட்டிக் ஆயில் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். சாதாரண ஆயிலைவிட சிந்தெடிக் ஆயிலின் விலை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், சிறந்த உயத்தன்மையை வழங்குவதால், எஞ்சின் அதிர்வுகளை வெகுவாக குறைக்கும்.

 03. பேடிங்

03. பேடிங்

டீசல் கார்களில் அதிர்வுகளை குறைக்க மிகச் சிறந்த வழி இதுவாக கூறலாம். விலை கொஞ்சம் அதிகமானாலும், டைனமேட் என்ற பிராண்டின் பேடிங் மெட்டிரியல் சிறந்த பலனை தரும். இது ஒரு சதுர மீட்டர் 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக இருக்க வேண்டும் என்றால், பாலியூரித்தேனிலான யோகா மேட்டுகளை பயன்படுத்தலாம். எஞ்சின் பகுதி, கீழ்பாகம், கதவுகளின் பேடுகள் மற்றும் தரைப்பகுதிகளில் பயன்படுத்தலாம். எஞ்சினுக்கும், கேபினுக்கான இடைப்பகுதியிலும் பேடிங் செய்வது அவசியம். உதாரணமாக, செடான் காருக்கு தரமானதாக பேடிங் செய்வதற்கு ரூ.25,000 வரை செலவாகும்.

04. அன்டர்பாடி கோட்டிங்

04. அன்டர்பாடி கோட்டிங்

கார் வாங்கும்போதே, அன்டர்பாடி கோட்டிங் செய்துவிடுவதும் நல்ல பலனை தரும். அன்டர்பாடி கோட்டிங் செய்வது துரு பிடிப்பதையும், கற்களால் காரின் அடிப்பாகம் சேதமடைவதை மட்டுமல்ல, சிறந்த சப்த தடுப்பையும் அளிக்கும். வாகன வகையை பொறுத்து சிறப்பான அன்டர்பாடி கோட்டிங் ரூ.3,500 முதல் ரூ.5,500 வரை செலவாகும்.

05. வினையூக்கி திரவம்

05. வினையூக்கி திரவம்

சிந்தெடிக் ஆயில் விலை அதிகமாக இருப்பதாக நினைப்பவர்கள், ஆயில் ஆடிட்டிவ் எனப்படும் வினையூக்கி திரவங்களை பயன்படுத்தலாம். இதுவும் எஞ்சின் இயங்கும்போது உராய்வை வெகுவாக குறைக்கும். எஸ்டிபி மற்றும் நியூலான் போன்ற வினையூக்கி திரவங்கள் டீசல் கார்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ரூ.400 முதல் ரூ.700 வரையிலான விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Here are given some ideas to reduce cabin noise in diesel cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X