காருக்குள் கெட்ட வாடை அடிக்காமல் தடுப்பது எப்படி?

By Lekhaka

கார் வைத்திருப்பதன் காரணமாக நீங்கள் எப்போதாவது அவமானப்பட்டதுண்டா? அல்லது நண்பர்களை அதி்ல் ஏற்றிச் செல்ல தயங்கியதுண்டா? சிலருக்கு அப்படி ஒரு அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கக் கூடும்.

காரணம், காரின் உள்ளேயிருக்கும் விரும்பத்தகாத வாசம்தான். பல லட்ச ரூபாய் கொடுத்து காரை வாங்கி நிறுத்தி விட்டு, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் நீங்கள் பந்தாவாக யாரையும் கூட்டிச் செல்ல முடியாது. இவ்வளவு பெரிய கார்... இப்படி நாற்றமடிக்கிறது... என யாராவது விமர்சனம் செய்தால் நீங்கள் நிலை குலைந்து போய் விடுவீர்கள்.

கார் டிப்ஸ்

சின்ன விஷயம்தானே என நாம் கவனிக்காமல் விடுவதால்தான் பல தலை குனிவுகள் வந்து சேர்கின்றன. சரி இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உங்கள் காருக்குள் சுகந்த மணம் வீச வைக்க முடியும். அதற்கான எளிய வழிகள் இதோ...

காரின் உள்புறத்தில் இருக்கும் விரும்பத்தகாத வாசனைகளுக்கு முதல் காரணம், உள்பகுதியல் பயன்படுத்தியிருக்கும் லெதர், பிளாஸ்டிக் உள்ளிட்டவைதான். அதற்கு அடுத்தபடியாக நமது பராமரிப்பு.

இந்த இரண்டையும் கன கச்சிதமாக நாம் பார்த்துக் கொண்டால், காருக்குள் அமர்ந்தே நீங்கள் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.

அதிக வாசனை பரப்பும் பொருள்கள், உணவுப் பண்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். அவ்வாறு செய்தாலே ஓரளவு கெட்ட வாடை வராமல் கட்டுப்படுத்த முடியும். இதைத் தவிர ரப்பர் மேட்கள் உள்ளிட்டவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

காருக்குள் அமர்ந்து புகைப் பிடித்தல், கெட்ட வாடை வருவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அவ்வாறு புகைப்பிடித்த பிறகு காருக்குள் தொடர்ந்து விரும்பத்தகாத வாசம் வந்து கொண்டே இருக்கும். எனவே, காருக்குள் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

அடுத்ததாக, காருக்குள் அமர்ந்து உணவருந்தக் கூடாது. அவ்வாறு உணவருந்திய பிறகு சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அடுத்த சில மணி நேரங்களில் காரின் உள்புற மணத்தையே அது மாற்றிவிடும். கெட்டுப் போன உணவுகளை வீட்டிலேயே வைத்திருக்க முடியாது. அது காருக்குள் கிடந்தால் எப்படி இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கூடுமானவரையில் காருக்குள் ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சிந்தி மேட்கள் நனைந்து விட்டால் உலர வைத்த பிறகு பயன்படுத்தவும், நனைந்த மேட்கள், சீட் பேட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினாலும் கெட்ட வாடை வரும்.

மென்மையான மணம் தரும் வாசனை திரவியங்களை (ஃப்ரெஸ்னர்) பயன்படுத்துங்கள். அது தீர்ந்தவுடன் உடனடியாக மாற்றி விடுவது நல்லது.

இந்த எளிய வழிமுறைகளைக் கையாண்டாலே போதும். காருக்குள் பயணிக்கும்போது மூச்சை அடக்காமல் நிம்மதி பெரு மூச்சு விடலாம்.

Most Read Articles
English summary
How To Make Your Car Smell Good.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X