காரை சர்வீஸ் சென்டரில் விடும்போது உஷார்... எச்சரிக்கை ரிப்போர்ட்!

By Saravana

கடந்த வாரம் எனது காரின் பூட் ரூம் மூடியின் மீது தேங்காய் விழுந்து நசுங்கி விட்டது. பெங்களூரில் உள்ள அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் மையத்தில், அந்த நசுங்கிய பகுதியை சரி செய்வதற்காக காரை கொடுக்க சென்றிருந்தேன். அந்த சர்வீஸ் சென்டரில் உள்ள சூப்பர்வைசர் நெருங்கிய நண்பர்தான். அவரது பரிந்துரையின் பேரில், அந்த சர்வீஸ் சென்டரில் நசுங்கிய பகுதிகளை சரி செய்யும் பிரிவின் சூப்பர்வைசரிடம் காரை கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

ஜாப் கார்டு போடாமல் வந்ததே எனக்கு டெலிவிரி எடுக்கும்போது பிரச்னையாக அமைந்தது. ஆம், சர்வீஸ் மையங்களில் காரில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை குறிப்பிட்டும், என்னென்ன பணிகள் செய்யப்படம், எவ்வளவு ரூபாய் தோராயமாக செலவாகும் என்பன போன்ற விஷயங்களை குறிப்பிட்டு எழுதும் ஜாப் கார்டு மிக முக்கியமானது. ஆனால், அதனை வாங்காமல் நம்பிக்கையின் பேரில் வந்தது எனக்கு தலைவலியை தந்துவிட்டது.

தலைவலி

தலைவலி

நசுங்கிய பகுதியை சரி செய்து தருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறினாலும், 5 நாட்களில் அந்த நசுங்கிய மூடிக்கு பதிலாக புதிய மூடி போட்டு சரி செய்துவிட்டனர். காரை டெலிவிரி பெறும்போதுதான், காரில் ஒரு வீல் கேப் இல்லை என்று அந்த சூப்பர்வைசர் வந்து சொன்னார்.

சமாளிப்பு

சமாளிப்பு

காரை விடுவதற்கு முன்னரே அந்த வீல் கேப் காணாமல் போயிருக்கும் என்றும் கூறி, அவர்களது கம்ப்யூட்டரில் காரில் வீல் கேப் இல்லாத படத்தை காட்டினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இன்ஸ்யூரன்ஸ் க்ளைம் செய்வதற்காக சர்வீஸ் விடுவதற்கு முன்னால் சில படங்களை எனது மொபைலில் எடுத்து வைத்திருந்தேன். அதில், நான்கு வீல் கேப்புகளும் இருப்பது தெளிவாக இருந்தது. இதனால், அவர் ஒன்றும் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

புதிய வீல் கேப்

புதிய வீல் கேப்

பின்னர், சர்வீஸ் சென்டரில்தான் காணாமல் போயிருக்கும் என எனது சூப்பர்வைசர் நண்பர் ஒப்புக்கொண்டு, புதிய வீல் கேப் தருவதாக ஒப்புக்கொண்டனர். மேலும், எப்போதும் கையோடு ஜாப் கார்டு எழுதி வாங்கி வரும் நான், அன்று அவசரத்தில் ஜாப் கார்டு போடாமல் வந்ததற்கான தண்டனையாக தேவையற்ற டென்ஷனை ஏற்படுத்திக் கொண்டேன். எனவே, சர்வீஸ் சென்டரில் காரை விடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை தொடர்ந்து காணலாம்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

காரில் உள்ள ஒரிஜினல் மற்றும் இதர ஆவணங்களை வீட்டில் எடுத்துவைத்து விட்டு காரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பவும். காரில் இருக்கும் விலையுயர்ந்த ஆக்சஸெரீகளை கையோடு எடுத்துவிட்டு கொடுக்கவும். க்ளவ் பாக்ஸ், பூட் ரூமில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வீட்டில் வைத்து விடுங்கள்.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

விலையுயர்ந்த மியூசிக் சிஸ்டம், ஊஃபர் மற்றும் ஸ்பீக்கர்கள் விபரம் பற்றி ஜாப் கார்டில் குறிப்பிட சொல்லுங்கள். பலர் சாமி சிலைகள் போன்றவற்றை வைத்திருந்தாலும், அதனையும் எடுத்துவிட்டே கொடுக்கவும்.

ஸ்டெப்னி வீல்

ஸ்டெப்னி வீல்

ஜாக் மற்றும் அதற்கான லிவர்களையும் வீட்டிலேயே வைத்து விடுங்கள். ஸ்டெப்னி டயர் இருப்பதை சர்வீஸ் சூப்பர்வைசரிடம் சொல்லி, ஜாப் கார்டில் குறிப்பிடச் சொல்லவும். மேலும், டயர்களின் விபரங்களையும், அதன் ட்ரெட் அளவையும் குறிப்பிட்டு எழுதி வாங்கி வைத்துக் கொள்ளவும்.

எரிபொருள் அளவு

எரிபொருள் அளவு

காரை விடும்போது எவ்வளவு கிலோமீட்டர் தூரம் கார் ஓடியிருக்கிறது என்பதை குறிப்பெடுத்து வைப்பதும் அவசியம். 30 சதவீதம் அளவுக்கு மட்டும் எரிபொருளை வைத்து கொடுக்கவும். சூப்பர்வைசர், நண்பர் என யாராக இருந்தாலும், ஜாப் கார்டு போட மறவாதீர்கள்.

 உஷார்

உஷார்

அறிமுகமான இடத்திலேயே இவ்வளவு பிரச்னை எழுகிறது. எனவே, வெளியில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷனில் விடும்போதும் கவனமாக இருக்கவும். அறிமுகம் இல்லாத மெக்கானிக் ஷாப்புகளில் காரின் உதிரிபாகங்களை மாற்றும் வாய்ப்பும் உள்ளது. எனவே, நம்பகமான இடத்தில் அல்லது அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் நிலையத்தில் மட்டுமே காரை சர்வீஸ் கொடுக்கவும்.

Most Read Articles
English summary
keep few things in mind while give your car to service station.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X