மெக்கானிக்கிடம் பணத்தைக் கொட்டாமல் உங்கள் காரை நீங்களே எளிமையாகப் பராமரிக்கலாம்...

By Lekhaka

ஆசைப்பட்டு வாங்கிய காரை முறையாகப் பராமரிக்காவிட்டால், அது தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். கார்களை நீண்ட காலம் ஓட்டாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தாலோ அல்லது தொடர்ந்து ஓய்வின்றி ஓட்டினாலோ அவற்றில் சில பிரச்னைகள் வருவது இயல்பு.

கார்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்குவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் அடிக்கடி மெக்கானிக்குகளிடம் கார்களைக் கொண்டுபோய் காட்டி பணத்தைக் கொட்டுவதற்குப் பதிலாக வாரந்தோறும் சில பராமரிப்பு முறைகளை நாம் தொடர்ந்து செய்து வந்தால், கார்களில் அடிக்கடி பழுது ஏற்படாமல் தடுக்க முடியும்.

எஞ்சின் ஆயில்

எஞ்சின் ஆயில்:

வாகனத்தின் இதயமாக விளங்குவது எஞ்சின். அதற்கு ஆக்ஜிஸன் போல உயிர்கொடுப்பது எஞ்சின் ஆயில். அவற்றை முறையாக மாற்றிப் பராமரித்தாலே பெரும்பாலான பிரச்னைகள் வராது.

ஆனால், நம்மில் பலரும் மெத்தனமாக இருப்பது என்ஜின் ஆயில் விஷயத்தில்தான். ஆயில் முழுமையாகத் தீர்ந்துபோகும் வரை மாற்றாமல் இருப்பது சரியல்ல. அதன் அளவு குறையும்போதே புதிதாக எஞ்சின் ஆயிலை மாற்ற வேண்டும்.

எஞ்சின் ஆயில் போதிய அளவு உள்ளதா என்று பார்ப்பதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவு எதுவும் தேவையில்லை. பேனட்டைத் திறந்து எஞ்சின் ஆயிலைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள டிப்-ஸ்டிக்கை வெளியே எடுத்து, துணியில் நன்றாகத் துடைத்துக் கொள்ளவும். பிறகு அதை மீண்டும் உள்செலுத்தி எஞ்சின் ஆயில் எவ்வளவு உள்ளது என்பதைப் பரிசோதிக்கலாம்.

குறைவாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக ஆயிலை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எஞ்சினின் செயல்பாடுகளை அது பாதிக்கும்.

பிரேக் ஆயில் அளவு:

அதேபோல் பிரேக் ஆயிலின் அளவை அடிக்கடி பரிசோதிப்பதும் அவசியம். பிரேக் ஆயில் குறைந்தாலோ அல்லது கசிந்தாலோ காரின் பிரேக் சிஸ்டம் செயல்படாது. பேனட்டிற்குள் எஞ்சினுக்கு அருகிலேயே பிரேக் ஆயில் டேங்க் இருக்கும். அதில் உள்ள ஆயிலின் அளவு குறைந்ததாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக காரை இயக்காமல் மெக்கானிக்கை அழைத்து வந்து சரி செய்ய வேண்டும்.

பிரேக் ஆயில்


கூலண்ட் அளவு:

நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. காரை இயக்கும்போது ஏற்படும் வெப்பத்துடன், வெயிலின் உக்கிரமும் சேர்ந்துகொண்டால் எஞ்சின் அதிவேகமாக சூடாகி விடும். அதே நிலையில் எஞ்சின் இயங்கினால் பழுதாகி நின்றுவிட வாய்ப்புள்ளது.

கூலண்ட்

எஞ்சினின் வெப்பத்தைத் தணிப்பதற்கும், காரில் ஏ.சி.யின் செயல்பாடுகளுக்கும் அதிமுக்கியப் பங்கு வகிப்பது கூலண்ட் ஆயில். கூலண்ட் ஆயில் டேங்கைப் பரிசோதித்து அதன் அளவை வாரந்தோறும் சரிபார்ப்பது நல்லது. ஒருவேளை கூலண்ட் ஆயில் குறைந்தால் எஞ்சினின் ஆயுளும் குறையும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

டயர் பாதுகாப்பு:

டயர்களில் உள்ள காற்றின் அளவை அடிக்கடி சரிபார்ப்பதுடன், அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் தென்படுகின்றனவா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். உதாரணமாக, டயர்களில் ஏதேனும் உலோகத் துண்டுகள் சிக்கியிருக்கலாம் அல்லது தேசமடைந்திருக்கலாம். அவற்றைக் கவனித்து உடனடியாக நிவர்த்தி செய்வது அவசியம்.

டயர் பராமரிப்பு

கசிவுகளை கவனியுங்கள்...

வேகத்தடையில் விரைவாக ஏற்றி இறக்கினாலோ அல்லது குழிகளில் வேகமாக ஓட்டினாலோ காருக்கு அடியிலிருந்து எரிபொருள் கசிந்து ஒழுகக் கூடும். சில சமயங்களில் ஏ.சி.க்களில் இருந்தும் தண்ணீர் அவ்வாறு வெளியேறலாம். அவற்றைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்தால், பெரிதாக வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

கசிவு

வாரம் ஒரு முறை மேற்கண்ட பரிசோதனைச் செய்து உங்கள் காரின் செயல்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டு உற்சாகப் பயணம் மேற்கொள்ளுங்கள்....

Most Read Articles
English summary
Keep Your Car In ‘Mint Condition’; Weekly Checks That You Must Do.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X