சொக்க வைக்கும் 'லோ ப்ரொஃபைல்' டயர்களின் சாதகங்களும், பாதகங்களும்!!

By Saravana

கார்களின் நிலைத்தன்மை, மைலேஜ் விஷயங்களிலும் டயர்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, மார்க்கெட்டில் புதுப் புது டிசைனில் கிடைக்கும் வீல்களையும், டயர்களையும் வாங்கிப் பொருத்துவதில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதில், லோ ப்ரோஃபைல் டயர்களை பொருத்துவதில் இளம் வயதினரிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.

பழைய காருக்கு கூட ஒரு லோ ப்ரொஃபைல் டயரை வாங்கிவிட்டால் அதன் தோற்றம் பன்மடங்கு கவர்ச்சியாக மாறிவிடும். ஹை ப்ரோஃபைல் டயர்களைவிட காரின் தோற்றத்தை லோ ப்ரோஃபைல் டயர்கள் சிறப்பாக காட்டுவது மட்டுமின்றி சில கூடுதல் நன்மைகளையும், சில பாதக அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்லைடரில் காணலாம்.


கவர்ச்சியை தவிர்த்து...

கவர்ச்சியை தவிர்த்து...

கவர்ச்சியை தவிர்த்து லோ ப்ரோஃபைல் டயர்களின் சாதகங்களையும், அதன் சில பாதகங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

Picture credit: Flickr

Bobenis

டயர் சைஸ் கண்டுபிடிப்பது எப்படி?

டயர் சைஸ் கண்டுபிடிப்பது எப்படி?

டயர்கள் பல்வேறு அளவுகளிலும், வகைகளிலும் கிடைக்கின்றன. மேலும், உங்களது காருக்கு பொருத்தமான அளவு கொண்ட டயரை மட்டுமே கண்டறிந்து பொருத்த வேண்டும். அதன் அளவுகள் டயரின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். டயர் அளவை மாற்றி பொருத்தினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உதாரணமாக 305/30ZR19 என்று டயரின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருந்தால், இந்த டயர் 305மிமீ அகலம் கொண்டது என்று அர்த்தம். அதற்கு அடுத்ததாக 30 என்பது டயரின் ப்ரோஃபைல்(அடுத்த ஸ்லைடில் விபரம்) என்ன என்பதையும், ஆங்கில எழுத்து அந்த டயரின் அதிகபட்ச டாப் ஸ்பீடு என்ன என்பதையும் குறிக்கும். இதில், இசட் என்று கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து இந்த டயரின் அதிகபட்ச தாங்கும் வேகம் மணிக்கு 300 கிமீ என்பதை குறிக்கிறது. அடுத்ததாக ஆர் என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கிறது. அதற்கு அடுத்து 19 என்பது டயரின் விட்டத்தை இஞ்ச் அளவில் குறிப்பதாகும்.

டயர் ப்ரோஃபைல் என்றால்...

டயர் ப்ரோஃபைல் என்றால்...

டயரின் ப்ரோஃபைல் என்பது டயரின் பக்கவாட்டு சுவரின் உயரத்தை குறிப்பதாக அமைகிறது. அதாவது டயரின் அகலத்தில், அதன் பக்கவாட்டு உயரம் எத்தனை சதவீதம் என்பதை குறிப்பிடுவதுதான் டயர் ப்ரோஃபைல். படத்தில் காணும் 305 மிமீ அகலம் கொண்ட டயரில் அதன் பக்கவாட்டு உயரம் 30 சதவீதம் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக 305 மிமீ அகலம் கொண்ட டயரில் அதன் பக்கவாட்டு உயரம் 60 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் அது லோ ப்ரோஃபைல் டயர் வகையில் சேர்ந்துவிடும். படத்தில் காணும் டயர் 30 சதவீதம் மட்டுமே கொண்டிருப்பதால் இது மிக பக்காவான லோ ப்ரோஃபைல் டயராக குறிப்பிட முடியும்.

Picture credit: Flickr

Dennis Larson

 சாதகங்கள்

சாதகங்கள்

லோ ப்ரோஃபைல் டயர்களும், அதன் பெரிய ரிம்மும் காருக்கு சிறப்பான தோற்றத்தை தருவதோடு பல சாதகங்களை கொண்டுள்ளன. இந்த வகை டயர்கள் காருக்கு மிகச் சிறப்பான கையாளுமையையும், தரைப் பிடிப்பையும் தரும். பிரேக் செயல்திறனும் மிகச்சிறப்பாக இருக்கும். ஏனெனில், ஹை ப்ரோஃபைல் டயர்களைவிட லோ ப்ரோஃபைல் டயர்களின் தரையுடன் தொடும் பகுதி அதிகமாக இருக்கும். வளைவுகளில் திரும்பும்போதும் அதிக நிலைத்தன்மையை வழங்கும்.

பாதகங்கள்

பாதகங்கள்

பல சாதகங்களை பட்டியலிடும் அளவுக்கு ஏற்ப அதிக பாதகங்களையும் இந்த டயர்கள் கொண்டுள்ளன. சமதளமான சாலைகளில் மிகச்சிறப்பாக செயல்படும் இந்த வகை டயர்கள் கரடு முரடான அல்லது மோசமான சாலைகளில் பல் இளித்து விடும். லோ ப்ரோஃபைல் டயர்கள் கொண்ட கார்களை மோசமான சாலைகளில் இயக்கும்போது ரிம்மில் அதிக பாதிப்புகள் ஏற்படும். இதுதவிர, சஸ்பென்ஷன் செயல்பாடும் சிறப்பாக இல்லாமல் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாக இருக்கும். சொகுசாக இருக்காது. மேலும், தரைப்பிடிமானம் அதிகமாக இருப்பதால் டயரிலிருந்து அதிக சப்தம் எழும்பும்.

இன்னும் இருக்கு...

இன்னும் இருக்கு...

லோ ப்ரோஃபைல் டயர்களில் பட்டன்களின் உயரம் குறைவாக இருக்கும். இதனால், மழை நேரங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து வெளியேறுவதற்கான இடைவெளி குறைவாக இருக்கும் என்பதால் வழுக்கும் ஆபத்து இருக்கிறது. மைலேஜும் குறையும். இவை எல்லாவற்றையும் விட, சாதாரண டயர்களைவிட இவற்றின் விலை மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

கார் தயாரிப்பாளர்களின் பரிந்துரையின் படி டயர்களை வாங்கி பொருத்துவதே சாலச் சிறந்தது. மேலும், சரியான அளவு கொண்ட லோ ப்ரோஃபைல் டயர்களை அனுபவமிக்க மெக்கானிக்குகளை வைத்து மாற்றவும். மேலும், டயரின் அளவை மூன்று சதவீதம் மட்டுமே கூட்டிக் கொள்ள கார் தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, லோ ப்ரோஃபைல் டயர்களுக்கான ரிம் அளவும் சரியானதாக தேர்ந்தெடுத்து பொருத்துவது நல்லது.

Picture credit: Flickr

Vulcho

Most Read Articles
English summary
How many times have you noticed a car running with those cool wheels and tyres that look larger than the standard ones fitted on your car? Chances are quite a few times, so we thought we'd shed some light on your rubber doubts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X