ஸ்கார்ப்பியோ, சியாஸ் கார்களில் இருக்கும் 'மைல்டு ஹைப்ரிட்' நுட்பம் பற்றிய தகவல்கள்!!

இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சியாஸ், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட கார்களில் கொடுக்கப்படும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இயங்கும் விதம், அதன் நன்மைகளை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

கார்களில் அதிக மைலேஜ் பெறுவதற்கும், நச்சுப் புகையை குறைப்பதற்கும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில், தற்போது 'Mild Hybrid System' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கார் மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, மாருதி சியாஸ், மாருதி எர்டிகா போன்ற கார்களில் 'மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்' எனப்படும் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் இயங்கும் விதம் மற்றும் நன்மைகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா பிரையஸ், ஹோண்டா அக்கார்டு போன்ற கார்களில் முழுமையான ஹைப்ரிட் கார்களாக வரையறுக்கப்படுகின்றன. முழுமையான ஹைப்ரிட் கார்களில் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் தனித்தனியாகவும், சேர்ந்தும் காரின் சக்கரங்களுக்கு ஆற்றலை செலுத்தும் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இதற்காக, பிரத்யேகமான டிரான்ஸ்மிஷன் அமைப்பு பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், முழுமையான ஹைப்ரிட் கார்களாக குறிப்பிட முடியாத இந்த மைல்டு ஹைப்ரிட் கார்களில் எஞ்சினுக்கு துணையாக மட்டுமே மின்மோட்டார் செயல்படும். காரின் எஞ்சினுக்கு அருகில் மின் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். இதனை Integrated Starter Generator[ISG] என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த மின் மோட்டார் இரு விதமான பயன்பாடு கொண்டது. கார் எஞ்சினுக்கு கூடுதல் சுமை ஏற்படும் சமயங்களில் இந்த ஐஎஸ்ஜி எனப்படும் இந்த மின்மோட்டார் துணையாக இயங்கும். அப்போது, கார் எஞ்சினுக்கு அதிக சுமை ஏற்படாது என்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

பொதுவாக கார் எஞ்சின் கிராங்க்சாஃப்ட்டுடன் இந்த ஐஎஸ்ஜி மின்மோட்டார் பெல்ட் மூலமாக இணைக்கப்பட்டு இருக்கும். இதனால், ஆரம்ப நிலை வேகத்தில் எஞ்சினுக்கு ஏற்படும் சுமை வெகுவாக குறைப்படுகிறது. இந்த ஐஎஸ்ஜி மின்மோட்டாரில் மற்றொரு பயனும் இருக்கிறது.

இதுபோன்ற மைல்டு ஹைப்ரிட் கார்களில் அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்படுகிறது. பேட்டரியிலிருந்து மின்சாரத்தை பெற்று ஐஎஸ்ஜி மோட்டார் இயங்குகிறது. காரின் வேகத்தை குறைக்கும்போது இந்த ஐஎஸ்ஜி மோட்டார் எதிர்திசையில் சுழன்று மின் ஜெனரேட்டர் போல செயல்படும். அப்போது கிடைக்கும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. மேலும், செல்ஃப் மோட்டாராகவும் இந்த ஐஎஸ்ஜி மோட்டார் செயல்படுகிறது.

மைல்டு ஹைப்ரிட் கார்களில் ஐஎஸ்ஜி மோட்டார், அதிக திறன் வாய்ந்த பேட்டரி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் எனர்ஜி போன்ற நுட்பங்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டமும் முக்கியத்துவம் பெறுகிறது. கார் நிற்கும்போதும், நியூட்ரல் கியரில் இருக்கும்போது 3 வினாடிகளில் எஞ்சின் தானாக நின்றுவிடும். க்ளட்ச் பெடலை மிதிக்கும்போது எஞ்சின் இயங்கத் துவங்கிவிடும்.

இது சிக்னல்களில் கார் நிற்கும்போது எரிபொருள் விரயத்தை தவிர்க்க உதவுகிறது. அதேபோன்று, கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் வசதியும் முக்கியம். இதன்மூலமாக, சரியான கியரில் காரை இயக்க வழி கிடைக்கும். இதன்மூலமாகவும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடிவதோடு, புகையின் அளவை கட்டுப்படுத்தவும் வழி கிடைக்கிறது.

முழுமையான ஹைப்ரிட் கார்களை போன்று அல்லாமல், இதன் தொழில்நுட்பமும் மிக எளிமையானதாக இருக்கிறது. மேலும், முழுமையான ஹைப்ரிட் கார்களில் பேட்டரி மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்களால் அதிக எடை கூடுகிறது. இவை இந்த மைல்டு ஹைப்ரிட் கார்களில் தவிர்க்கப்படுகிறது. பராமரிப்பும் குறைவாக தேவைப்படுகின்றது.

அத்துடன், விலையையும் மிக சவாலாக நிர்ணயிக்க முடிகிறது. மாருதி சியாஸ் காரின் எஸ்விஎச்எஸ் ஹைப்ரிட் மாடல் சென்னையில் ரூ.8.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மைல்டு ஹைப்ரிட் மாடல் ரூ.10.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது மிக சவாலான விலை.

அத்துடன், விலையையும் மிக சவாலாக நிர்ணயிக்க முடிகிறது. மாருதி சியாஸ் காரின் எஸ்விஎச்எஸ் ஹைப்ரிட் மாடல் சென்னையில் ரூ.8.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மைல்டு ஹைப்ரிட் மாடல் ரூ.10.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது மிக சவாலான விலை.

மாருதி சியாஸ் காரின் மைல்டு ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது நடைமுறையில் குறையும் என்றாலும், சாதாரண மாடலைவிட இது நிச்சயம் அதிக மைலேஜை தரும் என்று கூற முடியும். இதனால்தான், வாடிக்கையாளர்கள் மாருதி சியாஸ் உள்ளிட்ட மைல்டு ஹைப்ரிட் மாடல்களுக்கு அதிக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

  • புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார்  விற்பனைக்கு அறிமுகம்!

  • புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் 750 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய டாடா டிகோர் காரின் பிரத்யேக படங்கள்!

டெல்லியில் மீடியா டிரைவ் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புதிய டாடா டிகோர் காரின் படங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, March 17, 2017, 16:35 [IST]
English summary
Read in Tamil: Mild Hybrid System Explained
Please Wait while comments are loading...

Latest Photos