இனிமையான பயணத்திற்கு காருக்கு அவசியமான சில முக்கிய சாதனங்கள்!

Written By:

கார் பயணங்களை இனிமையாக்கும் விதத்தில் ஏராளமான ஆக்சஸெரீகள் மார்க்கெட்டில் குவிந்து கிடக்கின்றன. அதில், சில பயனுள்ள மற்றும் விபத்தை தவிர்க்க உதவும் ஆக்சஸெரீகள் சிலவற்றை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.

இதில் சில நூறு ரூபாய் விலையில் கிடைக்கும் ஆக்சஸெரீகள் உங்கள் உயிரை காக்கும் ஆபத்பாந்தவானாக கூட மாறலாம். இங்கு தரப்பட்டிருக்கும் பல கருவிகள் ஆன்லைன் வர்த்தக தளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவற்றை எளிதாக ஆர்டர் செய்து பெற முடியும்.

காற்று பிடிக்கும் கம்ப்ரஷர்

வெளியூர் பயணங்களின்போது அறிமுக இல்லாத இடங்களில் டயர் பஞ்சராகும்போதோ அல்லது காற்று குறைந்தாலோ பயணத்தை தடையில்லாமல் தொடர்வதற்கு இந்த காற்று பிடிக்கும் மினி கம்ப்ரஷர் எந்திரம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். காரில் உள்ள 12V சாக்கெட் மூலமாக இந்த கம்ப்ரஷர் இயங்கும்.

மேலும், இப்போது ட்யூப்லெஸ் டயர் வருவதால், அதற்கான பஞ்சர் கிட் எப்போதும் கையில் இருப்பதும் அவசியம். பஞ்சரானாலும் கம்ப்ரஷரில் காற்றுப் பிடித்துக் கொண்டு பயணத்தை தொடரலாம். இல்லையெனில், பஞ்சர் கிட்டிலுள்ள கருவிகளை பயன்படுத்தி, பஞ்சரை சரி செய்த பின்னர், பயணத்தை தடையில்லாமல் தொடரலாம். ஸ்டெப்னி இருந்தாலும், இது அவசியமே.

டேஷ்போர்டு கேமரா

இந்த டேஷ்போர்டு கேமரா மிகவும் பயனுள்ள சாதனமாக கூறலாம். விபத்து ஏற்படும்போது, உங்கள் மீது தவறு இல்லாமல், எதிரில் வருபவர் தவறு செய்தால் கூட இந்த கேமரா பதிவு பயனுள்ளதாக இருக்கும். பல டேஷ்போர்டு கேமராக்கள் இப்போது 720 பிக்செல் துல்லியத்தில் படம் பிடிக்கும் திறன் கொண்டதாக இருக்கின்றன. ரூ.800 விலை முதல் ஆன்லைன் வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. பிளாபங்கட் டிவிஆர்20 என்ற டேஷ்போர்டு கேமரா 10 அங்குல திரையுடன் கிடைக்கிறது. ரூ.4,200 விலையில் இந்த டேஷ்போர்டு கேமரா கிடைக்கிறது.

மேப்மை இந்தியா டிரைவ் மேட்

இது காரின் இருப்பிடத்தையும், நகர்வையும் காட்டும் கண்காணிப்பு சாதனம். மேலும், காரின் ஓபிடி போர்ட்டில் இணைத்துக் கொண்டால் பல்வேறு வசதிகளை பெற முடியும். காரின் சர்வீஸ் தேதி, இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பு போன்ற கூடுதல் தகவல்களையும் ஸ்மார்ட்போன் பெற முடியும். இதற்கான சிம் கார்டுக்கான முதலாண்டு சேவைக்கான கட்டணம் ரூ.2,400 ஆக உள்ளது. இந்த சாதனத்தின் விலை ரூ.9,990.

ஹனிவெல் காற்று சுத்திகரிப்பு சாதனம்

காரில் ஏசி போட்டுக் கொண்டு சென்றால் கூட, காரினுள் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் கெட்ட வாடை போன்றவற்றால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் மிக சரியான விலையில் கிடைக்கின்றன. ஹனிவெல் நிறுவனத்தின் காற்று சுத்திகரிப்பு கருவியானது, காரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் கெட்ட வாடையை ஒழிப்படுன், பயணிப்பவர்களுக்கு தூய காற்றை சுவாசிக்க ஏதுவாக்குகிறது. சிகரெட் வாடை கூட போய்விடும். இந்த கார் சுத்திகரிப்பு கருவி ரூ.6,700 விலையில் கிடைக்கிறது. டேஷ்போர்டு அல்லது பின்புற பார்சல் ட்ரேயில் பொருத்தலாம்.

எச்சரிக்கை அலாரம்

நீண்ட தூர பயணங்களின்போது அலுப்பு காரணமாக ஓட்டுனர் தூங்கி விட வாய்ப்புள்ளது. இதனால், மோசமான விபத்துக்களில் வாகனம் சிக்கிவிடும் ஆபத்து உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நாப் ஸாப்பர் என்ற சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனை வலதுபுற காதில் புளூடூத் ஹெட்செட் போன்று மாட்டிக் கொண்டால் போதுமானது. ஓட்டுனர் தூங்கிவிடும்போது இந்த சாதனம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அதாவது, ஓட்டுனரின் தலை 30 டிகிரி கோணத்திலிருந்து விலகினாலும், சாய்ந்தாலும் இந்த கருவி எச்சரிக்கும். இந்த கருவி வெறும் 16 கிராம் எடை கொண்டது. ரூ.299 விலையில் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.

கழுத்து மசாஜ் சாதனம்

நீண்ட தூர பயணத்தின்போது ஓட்டுனர்களுக்கு கழுத்து வலி ஏற்படுகிறது. அவர்களால் தொடர்ந்து ஓட்டுவதும் கடினமாகும். அதுபோன்ற சமயங்களில் கழுத்துப் பகுதி தசைகளை மசாஜ் செய்வதற்காக விசேஷ சாதனங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஜேஎஸ்பி எச்எஃப்23 என்ற சாதனம், கழுத்துப் பகுதி, முதுகுப் பகுதிகளை இலகுவாக்குவதற்கான சாதனமாக இருக்கிறது.

ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்க முடியும். இதனை நான்குவிதமான வேகத்தில் இயக்க முடியும். இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அயற்சியிலிருந்து விடுதலை தருகிறது. 10 நிமிட மசாஜ் செய்வதன் மூலமாக உங்கள் கழுத்து வலி பஞ்சாய் போகும். இந்த சாதனம் ரூ.7,999 விலையில் கிடைக்கிறது.

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் உயர் தர படங்களை கேலரியில் காணலாம்.

English summary
Must Have Accessories For Cars.
Please Wait while comments are loading...

Latest Photos